ஏ. கே. 47

இன்றைய போர்ப்படைக் கருவிகளுள் ஏ கே 47 வகைத் துப்பாக்கியும் ஒன்றாகும். இக்கருவி தற்போது எல்லா நாடுகளிலும் கிடைக்கிறது.

இதன் பயன்பாட்டைப் பற்றிச் சிறுவர்கள் உட்பட அனைவரும் அறிந்து வைத்துள்ளனர் எனில் அது மிகையன்று. தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், சமூக விரோதிகள் ஆகியோரிடம் இதன் புழக்கம் மிகவும் அதிகம் எனலாம்.

சோவியத் நாட்டைச் சார்ந்த போர்ப்படை அதிகாரி மிகைல் கலாஷ் நிகாவ் என்பவர் 1947இல் இதனைக் கண்டுபிடித்தார்.

ரஷ்யா தன்னைச் சுற்றியுள்ள பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளிடம் இருந்து நாட்டைக் காபாற்றத் தகுதி வாய்ந்த ஆயுதம் ஒன்றைக் கண்டுபிடிக்க முனைந்தது. அப்போது தானியங்கித் துப்பாக்கி ஒன்றைக் கண்டறிவதில் கலாஷ்நிகாவ் ஈடுபட்டார். தேவையான இலக்கை நோக்கிச் சுடுவதில் அப்போதிருந்த கைத்துப்பாக்கி வெற்றிகரமாக அமையவில்லை. இதன் காரணமாக உருவானதுதான் ஏ.கே.47 வகைத் துப்பாக்கி.

துவக்கத்தில் ரஷ்யப் படைவீரர்களிடம் மட்டுமே இது பயன்பாட்டில் இருந்து வந்தது. பின்னர் பொதுவுடைமை நாடுகளான சீனா, வியட்நாம், கியூபா போன்றவற்றுக்கும் இதன் தொழில்நுட்பம் பரவியது. தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் இதன் பயன்பாடு விரிந்து பரவியது.

பின்னாளில் ஏ.கே 74, ஏ.கே. 100 போன்ற துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், ஏ.கே.47இன் சிறப்பு மட்டும் குறையவே இல்லை.

ஆனால் அமைதியை நிலை நாட்ட மட்டுமே பயன்பட வேண்டிய இத்தகைய ஆயுதங்கள் தீவிரவாதிகளிடமும், சமூக மற்றும் தேச விரோதிகளிடமும் சிக்கிப் பல்லாயிரம் பொதுமக்களைக் கொல்வதற்கும் காரணமாக அமைந்துவிட்டது மிகுந்த வருத்தத்திற்குரிய ஒன்றாகும்.

****

About The Author