ஏனென்று சொல்லத் தெரியவில்லை
சில முகங்களை
முதன் முறையாய்
பார்க்கும்போது
ஏற்கெனவே பார்த்த உணர்வை.
ஏனென்று சொல்லத் தெரியவில்லை
சிலர் செய்யும் நம்பிக்கை மோசடிகளை
முன்பே எதிர்பார்த்திருந்ததை.
ஏனென்று சொல்லத் தெரியவில்லை
கைவிட்டதைப் போல்
உணரும் நேரங்களில்
ஒலிக்கும் தொலைபேசியில்
நட்பின் கரம் நீளுமென்று
மனம் கணித்ததை.
ஏனென்று சொல்லத் தெரியவில்லை
எத்தனை முறை ஏமாந்தாலும்
‘உன்னைப் பிடிச்சிருக்கு’ என்று
புதிதாய்ச் சொல்லும் நபரிடம்
மனம் பறிகொடுப்பது
தப்பென்று உணர்ந்தாலும்
தடுக்க முடியாததை!
அ ரெஅலிச்டிc பொஎம்….லிகெ அ அ கிர்ல் …நிதொஉட் மகெஉப்…அன்ட் நல்கிங் நித் நடெர் பொட் இன் .தெ ரொஅட்.
ஏனென்று சொல்லத்தெரியவில்லை – வாழ்க்கையில் அன்றாடம் நாம் சனதிக்கின்ற மனிதவியல் தத்துவத்தை எளிமையாக அதே சமயம் யதார்த்தமாக கவிதையில் சொல்லியிருக்கிறீர்கள். சிம்ப்ளி ஸூப்பர்ப்.
மிகவும் அருமையான கவிதை. அனைவருமே அனுபவித ஒரு உணர்வு எளிமையான ஒரு நடையில். மிக மிக அருமை.
எனென்ரு தெரியவில்லை எதை எதையொ படித்தாலும் எதார்த்தங்கலில் இலைப்பரிவிடுகிரது மனது.
கவிதை மிக அருமை
யதார்த்தத்தை மிகவும் யதார்த்தமாக கவிதை நடையில் சொன்னது அருமை.
ஏனென்று சொல்லத்தெரியவில்லை
யதார்த்தமான கவிதைகலை
படிக்கும்போது பரவசமடைவதை.
வணக்கம் நண்பரே……………
அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும்
பிரச்சனைகளை அற்புதமான கவிதை வரியில்…………..