எஸ்.. எம்…எஸ்!” (5)”

நண்பருக்கு – டெலிபோன்ஸ் – என்னை மிகவும் பிடிக்கும். காரணம் என் இரு குரல் திறமை! சில நேரங்களில் அலுவலகத்திற்கே போன் செய்து விடுவார். "ஏதாச்சும் பாடுங்களேன்"

"என்ன பாட்டு?"

"சலங்கை ஒலில வந்தே பார்வதி பரமேச்வரம்.."

ராக வினோதங்கள் நடன சந்தோஷங்கள்.. பாட்டு அவருக்குப் பிடித்த பாட்டு. இரு குரல்களிலும் பாடியதும் அவருக்கு ஒரே குஷி.

"உங்களுக்கு ஏதாச்சும் செய்யணுமே" என்றார்.

விடுவேனா. என் பிரச்னையை சொன்னேன்.

"ம்ம்" யோசித்தார்.

"என்ன ப்ரெண்ட்.. ஏன் அவனோட பேசினீங்க"

எனக்குள் தடுமாற்றம். புனிதாவுக்கு இதில் எந்த அளவுக்கு சம்பந்தம் இருக்கிறது என்று எனக்குத் தெரியாதே.

"உங்க மிஸசை நீங்க டௌட் பண்றீங்களா" என்றார் பாலிஷாக.

"என் நிலைமையையும் நீங்க யோசிக்கணும். அவன் ரொம்ப நாளா மெசேஜ் அனுப்பறானாம். ஆனா இவ எங்கிட்டே ஒரு தரம் கூட சொன்னதில்லே." நண்பர் சிரித்தார்.

"உங்க மிஸஸை உங்களுக்குத் தெரியாதா.. சரி ஓக்கெ.. இப்ப என்ன வேணும். அவனோட அட்ரஸ்.. டிரை பண்றேன். நம்பர் சொல்லுங்க" சொன்னேன்.

"அட்ரஸ் கிடைச்சதும் என்ன செய்யப் போறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா" பிராமிசாய் எனக்கும் அப்போது ஐடியா எதுவும் இல்லை. முதலில் அவன் யார்.. எப்படி இருப்பான் என்கிற க்யூரியாசிட்டிதான்.

"சும்மா அவனைப் பார்க்கணும். ஏன் இப்படி செய்யறான்னு தெரிஞ்சுக்க முடிஞ்சா நல்லது.."

"என்னால உங்க பதிலை ஏத்துக்க முடியலே. எதுவும் வம்புல மாட்டிக்காதீங்க. எனக்கு போலீஸ்லயும் ப்ரெண்ட்ஸ் இருக்காங்க. ட்ரேஸ் பண்ணச் சொல்லலாமா"

"வே..ணாம்" நண்பர் விட்டு விட்டார்.

"ஓக்கே. டேக் கேர்"

அன்று முழுவதும் எனக்கு எந்த அழைப்பும் அல்லது குறுஞ்செய்தியும் வரவில்லை. என்ன ஆச்சு அவனுக்கு. ஒரு வேளை சந்தேகப்படுகிறானோ. வீட்டிற்குத் திரும்பியதும் அன்று இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது.

புனிதாவிடம் பயங்கர இறுக்கம் தெரிந்தது.

"ஏன் என்னோட செல்லையும் எடுத்துகிட்டு போயிடறீங்க."

"அது வந்து.."

"ஏங்க எவனோ ஒரு முட்டாள் பைத்தியக்காரத்தனமா மெசேஜ் அனுப்பறான்னா.. அதுக்காக இப்படி உங்க நிம்மதியைத் தொலைச்சிட்டு அலையணுமா"

"அவன் முட்டாளா.. இல்லே நான் முட்டாளான்னு தெரியலையே" என்றேன் மெதுவாக ஆனால் கேட்கும் ஒலியில்.
புனிதா எதிரில் வந்தாள்.

"என்ன சொன்னீங்க"

"புனிதா.. ஒரு விஷயம் எனக்கு கிளியர் ஆகலே. அவன் சொல்றான்.. இதுவரைக்கும் நிறைய மெசேஜ் அனுப்பினதா. ஆனா நீ ஒரு தரம் கூட என்கிட்டே அதைப் பத்தி சொல்லவே இல்லை."

என் குரலில் பரிபூர்ண கசப்பு வழிந்தது.

"ஓ"

அவ்வளவுதான். அதன் பிறகு புனிதா எதுவும் பேசவில்லை. இரவுச் சாப்பாடு கூட மௌனமாய். கட்டிலுக்கு வந்ததும் "ஒரு நிமிஷம்" என்றாள்.

‘என்ன’ என்பது போலப் பார்த்தேன்.

"நீங்க என்னை சந்தேகப்படறதா நான் நினைக்கலே. ஆனா குழம்பிப் போயிருக்கீங்க. இப்ப நான் என்ன சொன்னாலும் நீங்க வேற மாதிரி ஏதாச்சும் யோசிப்பீங்க. இதை ஏன் சொல்றேன்னா.. முதலிலேயே நீங்க என்கிட்டே மனசு விட்டு பேசியிருந்தா.. இந்த அளவு குழப்பத்தை வளர விட்டிருக்க மாட்டீங்க. இப்ப நீங்களா விடை கண்டு பிடிச்சு என்மேல தப்பு எதுவும் இல்லேன்னு தெரிஞ்சுகிட்டு வாங்க. அதுவரைக்கும் காத்திருக்கேன்"

படுத்துத் தூங்கி விட்டாள். எனக்கு என்னை சபித்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது. ஏன் இப்படி அடிமடையனாய் நடந்து கொண்டேன்.

உள்ளூர ஒவ்வெரு மனதிலும் ஏதோ ஒரு விதத்தில் ஒரு அற்ப எண்ணம் குடி கொண்டிருக்கிறது. வாய்ப்பு கிடைத்தால் அது வெளியே வந்து உலாத்தி விட்டு போகிறது. மெசேஜ் அனுப்புகிறவனுக்கு அது மெசேஜ் மூலமாய் வடிகாலாகிறது. சைகாலஜிஸ்ட்டைக் கேட்டால் ஏதாவது ஒரு விளக்கம் தரக் கூடும்.

புனிதாவின் செல் மினுமினுத்தது. மெமரி புல் என்றது. வேண்டாத மெசேஜை அழித்தால்தான் புது மெசேஜைப் படிக்கலாம்.
முதல் மெசேஜ் வசந்தியிடமிருந்து.

அடுத்தது நான் அனுப்பியது. ‘மெசேஜ் அனுப்ப கத்துக்கோ’

மூன்றாவது.. என் தலைக்குள் பல்ப் ஒளிர்ந்தது அப்போது.

(தொடரும்)

About The Author