1.
ஆட ஆரம்பிக்கின்றன
எழுத்துக்கள்
ஆவியாகின்றன
வார்த்தைகள்
காலியிடத்தில் நிரம்புகிறது
கவிதை.
2.
எழுதுவது பேனாவா
பேனா நிழலா
உற்றுப்பார்க்கையில்
எழுதும் நிழலில்
ஒளிந்திருக்கிறது
என் நிழல்.
3.
மௌனித்திருக்கையில்
எதையாவது
சொல்லத்துடிக்குதென் நா
தன்பல்லில் தானே கடிபட்டு.
4.
கவிதை எழுதும்
ஸித்தி பெற்றேன்
எழுதாதிருக்கும் ஸித்தி
இன்னும் வாய்க்கவில்லை.
(‘சாட்சியாக…’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here“