எல்லை இல்லை

என்நண்பர், ஓரறிஞர்;
எழுத்துலகைப் போற்றுபவர்
இன்னும்சில நாட்களிலே
இலக்கியத்துத் தாரகையாய்
மின்னிடநான் விரும்புபவர்;
மொழிந்திட்டார் நேற்றிரவு;
“என்னப்பேன்! பழங்கதையா?
எரித்துவிடு இதனைஉடன்!”

“வானத்தைப் பாடாதே!
வறுமையினைப் போக்கஅமர்!
போனத்தைப் பாடாதே!
புரட்சியினைத் தூண்டநிமிர்!
மானத்தை விற்கவரும்
மடந்தையளின் நிலைகூறி
ஆனத்தைச் செய்துவிடு;
அவள்துயரைத் தீர்த்தற்கு!

“தினந்தோறும் பட்டினியால்
தேய்கின்றோன் முன்னிலையில்,-
வனத்தின் எழில்பாடல்;
வானத்தை வர்ணித்தல்;
மனத்தை வெல்கவெனில்;
மதியத்தை நோக்கிடெனல்;
சினத்தீயை மூட்டாதோ?
சிந்திப்பாய் சிறிதளவு!”

About The Author

1 Comment

  1. P.Balakrishnan

    நல்ல கருத்து. நண்பரின் எண்ணத்தை நடைமுறைப்
    படுத்துங்கள்.

Comments are closed.