ஏகாந்த வேளையிலே, எனக்குப் பிடித்த காலையிலே,
என் முகத்தில் கால் உதைத்து, என் உறக்கம் கலைத்து விட்டு
கண்ணுறங்கும் என் மகளை எழுதி விட எத்தனித்தேன்
எட்டு வரி கவியினிலே!
பொங்கி வந்த உவகையினால், எந்திரமாய் எழுந்துகொண்டு,
எதிர்கொண்ட மேசையினில் தானிருந்த காகிதத்தில்
எழுதி விட எத்தனித்தேன் என் மகளை எட்டு வரி.
கவி பிடிக்கச் சென்றவொரு சிந்தனையின்
வலையினிலே சிக்கிவிட்ட என் மகளின்
வண்டு விழி பற்றியொரு கவி வரைய
வார்த்தை எனக்கெட்டவில்லை!
மிளகளவு தங்கமணி குடிகொண்ட செவிகளையும்
பற்றியொரு கவி எழுத,
கம்பனது கவியரங்கில்
கலந்திடவும் வேண்டுமன்றோ?!
குறும்புகளின் அளவுகளை குறுநகையில் காட்டி விடும்
இளையவளின் முல்லைச் சர பற்கள்தம்
முழு அழகைக் காணவொரு கற்கண்டு
கப்பங்கட்ட வேண்டுமன்றோ?
வேண்டி வந்த வெக்காளி சிருஷ்டி செய்த என் மகளை
பட்ட திருஷ்டி போதுமென்று எண்ணுங்கால்,
காற்றினிலே வட்டமிட்ட எழுத்தாணி, மேசை வாய் சென்று விட,
காத்திருந்த காற்சூட்டு தேனீரை, சொடுக்கிவிட்ட கையெடுக்க,
கண் விழித்த கண்மணியோ சிகை கலைந்த சிணுங்கலுடன்
கை உயர்த்தியெனை அழைக்க,
கட்டியொரு முத்தமொன்று தந்திடுங்கால்
என் மகளை அரவணைக்க எந்திரமாய் எழுந்து கொண்டு
எடுத்து வைத்தேன் எட்டு அடி.
சூபர்
பெற்றெடுத்த அருமைப் பெண் அவளை
எட்டு வரி கவிதை எழுதிடவே எத்தனித்த
கவிஞர் கணேஷ் அவர்களின் ஒவ்வொரு
வரிகளையும் படிக்குங்கால், அவர் கப்பங்கட்டிய
கற்கண்டாய் இனித்தது ஐயா என் மனது.
எனக்குள் மட்டும் ஒரு சிறிய வருத்தம்
எனக்கும் அது போல் ஓர் பெண் குழந்தை இல்லையென்று.
இறுதி வரியில் எட்டு அடி எடுத்து வைத்த கவிஞர் போல்
புறப்பட்டேன் பெண் ஒருத்தியை (மருமகளாகத்) தத்தெடுக்க.
வை. கோபாலகிருஷ்ணன்
வெகு அருமை இன்னும் பல கவிதைகளை எதிர்பார்க்கிறேன்
Thanks lot for your comments.
Regards,
Ganesh
குட்டி இன் குட்டிபென்னை பட்ரிய குட்டிக் கவிதை படு சுட்டி.
—-சுன்தரெசன்
Dear Ganesh
I am surprised. Wonderful to know there is a great poet in you.
I am very pleased to know that you shine in any thing you take it up seriously.
Looking forward to more of this in the future.
Ramu
சூபர்
குட்டியின் கவிதைக்கு ஒரு குட்டி கவிதை எழுதியிருக்கும் மாமாவிற்க்கும் எனது பாராட்டுக்கள்.