என்ன செய்வாய்….

சின்ன வயதில் இருந்தே…
அம்மா எனக்காக வேண்டித் தரும்…
பேனா
பென்சில்…
புத்தகம்..
எல்லாவற்றிற்காகவும்…நீ
சண்டை பிடிப்பாய்…
அக்காவினுடையதையோ…
தங்கையினுடையதையோ…
தந்தால் கூட என்னதுதான் வேண்டும் என்று…
அடம் பிடிப்பாய்…
என் அம்மா சொல்வாள் கொடு என்று….
நான் சளைத்தவள்… இல்லை…
தரவே தரமாட்டேன்….
பறித்துக் கொண்டு ஒடி விடுவாய்….
பின்னால் ஒடி வருவேன்…
என்னதைத் தா என்று…
நீயோ தரமாட்டாய்….
உன் அம்மாவிடம் சொல்லுவேன்….
‘அவளின்ரையை குடடா…’
உன் அம்மா உன்னை ஏசுவாள்…
அதன் பிறகுதான்
நான் அமைதியாவேன்….
இப்போதும் அப்படித்தான்…
பறித்தது….
என்னிதயம்….
தா என்கிறேன்…
அம்மாவிடம் சொல் என்கிறாய்….
எப்படிச் சொல்வேன்…
‘அவளின்ரையை அவளிட்ட குடடா…’
அம்மா சொன்னால்….

About The Author

5 Comments

Comments are closed.