பால்கனி சுவற்றில்
வெட்சி மலர் போல்
உன் விரல்களைப்
பூக்கவிட்டு நிற்கிறாய்…
உன்னருகே வந்து
உன் இதழ் பிரியும்
அத்தனை வார்த்தைகளையும்
என் செவிகளில்
ஒன்று சேர்த்து நிற்கிறேன்…
மலர் தாவும் வண்டாய்
என் விரல்கள், சுவற்றில்
பூத்த உன் விரல்களில்
வந்தமரமுயல,
அதை முன்பே எதிர்பார்த்தவளாய்
கூட்டுக்குள் அடைந்த நத்தைபோல்
உன் விரல்களை
இழுத்துக் கொண்டு
எதிர்த் திசையில் நிலாமுகம் திருப்பி
இதழோரம் மெல்லிய
புன்னகையைத் தவழ விடுகிறாய்…
நீ தவழவிட்ட
பொன்னகையில்
மறைந்து நின்ற
ஊடல் முத்துக்களை ரசித்தவாறே
என் இதழ் தவறிச்
சிந்திய அசட்டுச்சிரிப்பை
சேகரித்துக் கொண்டிருந்தேன்
நினைவடுக்குகளில்…
அருமை:-)
சூப்பர் கவிதை. அருமை நடை. மொத்தத்தில் கலக்கல்.
அருமை