அன்பான முத்தங்கள் வேண்டி
காலையில் கண் விழிக்கிறேன்…
காலில் சக்கரம் கட்டிய நீ
சமையல் அறைக்கும்
சாப்பாட்டு அறைக்கும்…
சன்னமாய் சிணுங்கும் எனக்கு
சலசலவென தலையில் தண்ணீர்.
கொட்டாவி விடுமுன்னே
வாயில் வறண்ட ரொட்டி…!
விழுங்கு முன்னே வாசலில்
வாகனத்தின் அழைப்பொலி…
புத்தக மூட்டைகளுடன்
புளி மூட்டையாய் ஏற்றப்படுகிறேன்…!
ஏறியதும் உன் முகம் பார்க்கிறேன்
அதில் எனக்கு வேண்டிய
புன்னகை இல்லை…?
‘அப்பா ஒரு வேலை முடிந்தது’
என்ற ஆசுவாசம் மட்டும்….!?
அம்மா…!
எனக்குப் புரியவில்லை..
உனக்கு நான்
களிப்பா…!? கவலையா…!?
மிக மிக மிக அருமையான கவிதை லதா! வாழ்த்துக்கள்!
அவசரகதியில் இயங்கும் உலகில் பிஞ்சுகள் பெற்றோர்களின் அன்புக்கு ஏங்குவது இயற்கைதான்.
கவிதை அருமை வாழ்த்துகள் உனக்கு களிப்பா கவலையா என்கிற வரி மனதை நெருடுகிறது
அருமையான கவிதை.
அழகான, ரசித்த ஒரு கவிதை
கவிதையை விமர்சித்து ஊக்குவித்த தேவிராஜன், பாலகிருஷ்ணன், ரிஷபன், மனோ மற்றூம் பாலமுருகன் அவர்களூக்கும் நன்றி.
அருமையான கவிதை
மிக அருமை தேர்ந்த நடை வாழ்துக்கல்