எதனாலே?…அதனாலே

தாய்மனம் கலங்குவதெதனாலே? அவள்
சேய் உடல் நடுங்குது அதனாலே.

சேய் தேகத்தில் நடுக்கம் எதனாலே? அருகில்
ராச நாகத்தின் முழக்கம் அதனாலே.

ராச நாகத்தின் முழக்கம் எதனாலே? அதன்
சிறு தேகத்தில் பெருவலி அதனாலே.

நாக தேகத்தில் பெருவலி எதனாலே? அதன்
வால் பாகத்தில் நகக்குறி அதனாலே.

வால் பாகத்தில் நகக்குறி எதனாலே? புலி
கால் பாதத்தால் மிதித்தது அதனாலே.

புலி பாதத்தால் மிதித்தது எதனாலே? இனப்
பலி நாகத்தால் விளைந்தது அதனாலே.

நாகம் செய் இனக்கொலை எதனாலே? முழு
வேகத்தில் இனப்பகை அதனாலே.

இனப்பகை இவர்க்குள் எதனாலே? தமிழ்
முனைப்புடன் எழுந்தது அதனாலே.

தமிழ் முனைப்புடன் எழுந்தது எதனாலே? அது
மொழிக்குள தனிக்குணம் அதனாலே.

எழுந்தபின் விழுந்தது எதனாலே? அதில்
நுழைந்தது அரசியல் அதனாலே.

அங்கு அரசியல் நுழைந்தது எதனாலே? ஊர்
எங்கும் அரசியல் பிழைப்பது அதுபோலே.

அரசியல் பிழைத்தார்க்கு எது விளம்பு
அறம் கூற்றாகும் எனும் சிலம்பு.

About The Author

5 Comments

  1. R. Mahendran

    வார்த்தைகள் ஏதுமில்லை வாழ்த்துவதற்கு…
    அருமை… நீங்கள் தமிழ்க்கவியோ?(இலக்கணம் பயின்ற)

  2. Arima Elangkannan

    அரசியல் நாடகமும் அகதிகளின் அவலமும் அம்பலப்படுத்தப் பட்டுள்ளது.

  3. sheik mohamed

    றெஅல்ல்ய் அல்ல் தெ நொர்ட்ச் fரொம் கெஅர்ட்……………………… வழ்ல்க டமில்

  4. chandran

    உன்க கவிதைகல் ரொம்ப ரொம்ப புடிசிருக்கு. ரொம்ப நல்ல எழுதிரின்கெ எழுடுன்கெ வழ்துக்கல்.

Comments are closed.