(தில்லித் தமிழ்ச்சங்க வெளியீடான "சுடர்" ஆண்டு மலரில் 1951 – 52ல் பிரசுரமான ஒரு கவிதையிலிருந்து நினைவால் மீண்டெடுத்த சில வரிகள்)
மாந்தளிரில் குயிலென்னும்
மகராணி வீற்றுத்தன்
வேந்தன்வரக் காணாத
வேதனையைப் பாட்டிசைப்பாள்.
பவளக் குன்றுச்சி
படுத்துறங்கும் முகிலும்இடை
துவளக் குடம்தூக்கித்
தோகையைப்போல் நடக்கின்றாள்
கண்ணுக்கு மைதீட்டக்
காரிருளை நீகுழைத்தால்
மண்ணுக்கு ஒளிஏது?
மானுடன்என் காதலினால்
நாணிதன் கண்புதைக்கும்
நட்சத்திர வதனீ!
வீணுக்கு ஊடாதுஇவ்
வீணைக்கு அமுதேற்று
—-
ஊடல் தவிர்க்க ஒருபாடல-நீர்
உதிர்த்த வரிகள் பரிபாடல்
தேடல் வேண்டாம் பொருள்காண-இல்லில்
தினமும் நடக்கும் அவள்நாண
உப்பின் அளவே அதுவேண்டும்-என
உணர்ந்து நடக்கும் நிலைவேண்டும்
தப்பாம் அதுவே நீளுமெனில்-உடன்
தணிக்கா விட்டால் துன்பமெனில
புலவர் சா இராமாநுசம் -சென்னை