கண்ணன் வேலை பார்க்கும் அலுவலகம் பிரம்மாண்டமான பலமாடிக் கட்டிடம். வெளிப்புறச் சுவர்கள் அனைத்தும் கண்ணாடி சுவர்களால் வேயப்பட்டிருந்தன.
கண்ணாடிக் கட்டிடத்தைச் சுற்றி அமைதிச் சின்னமான புறாக்கள் பல அங்குமிங்குமாக பறந்து வட்டமிடுவதை பார்ப்பதற்கு மிகவும் ரம்யமாக இருக்கும்.
புறாக்களின் எதிரியான கழுகு திடீரென்று புறாக் கூட்டத்தைத் தாக்க வரும்போது புறாக்கள் பயத்தில் வேகமாகப் பறந்து வரும் சமயம் கண்ணாடி சுவரில் மோதி தரையில் விழுந்துவிடும் அபாயம் அதிகமுண்டு.
ஒரு சமயம் அப்படி நடந்த ஒரு விபத்தில் கண்ணாடி சுவற்றில் மோதி அடிபட்டு துடிதுடித்து விழுந்து மயக்கத்தில் இருந்த புறாவைப் பார்த்த கண்ணன் தன் உடல்நிலை சரியில்லாத போதும் தனக்கு அப்படி ஒரு விபத்து நடந்ததாக எண்ணி வருத்தமுற்றான்.
தாமதிக்காமல் உடனே அடிபட்ட புறாவை கையில் எடுத்து புறா இளைப்பாற காற்றோட்டாமான இடத்தில் யாருடைய தொந்தரவும் ஏற்படாவண்ணம் அட்டைப் பெட்டியில் வைத்து புறாவுக்கு சிறிய கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றினான்.
சிறிது நேரம் கழித்துப் பார்த்ததில் புறா சற்று அசைய ஆரம்பித்து மெதுவாக கிண்ணத்தில் இருந்த நீரைப் பருகியது.
சற்று நேரத்திற்கெல்லாம் அட்டைப் பெட்டிக்குள்ளேயே புறா வலம் வர ஆரம்பித்ததைக் கண்ட கண்ணனுக்கு புறாவுக்கு உயிர் கொடுத்து விட்ட சந்தோஷம். எண்ணிலடங்கா மகிழ்ச்சி.
சற்றும் தாமதியாது வேர்க்கடலை மற்றும் பழங்களின் சிறிய துண்டுகளை புறாவுக்கு கண்ணன் சாப்பிட்ட தந்தான்.
பசியில் புறாவும் கண்ணனிடமிருந்து சுதந்திரமாக அவனது கையிலிருந்த கடலையையும் துண்டுப் பழங்களையும் கவ்வி சாப்பிட ஆரம்பித்தது. வெகு நேரம் கழித்து கண்ணன் பார்த்தபோது ஒருவாறாகத் தேறிய புறா மீண்டும் பழையபடி பறக்க எத்தனித்தது.
இதனைக் கண்ட கண்ணன் மிகுந்த பூரிப்புடன் புறாவை எடுத்து வானில் சுதந்திரமாக பறக்கவிட்டான்.
மாலையில் உடல்நிலை சரியில்லாத கண்ணன் தன்னுடைய அலுவலுகத்திலிருந்து வீட்டிற்கு திரும்பும் நேரம் திடீரென்று தெருவில் வாந்தி எடுத்தபிறகு மயக்கமடைந்து விட்டான்.
இதனைப் பார்த்த மேலே பறந்து கொண்டிருந்த புறா ஒன்று உடனே கண்ணனுக்கு உதவி செய்ய எண்ணிற்று. அவ்வழியாக சென்றுகொண்டிருந்த வாலிபர் மீது தன் மலத்தைக் கழித்தது.
உடனே அந்த வாலிபன் பக்கத்தில் இருந்த கடையிலிருந்து தண்ணீரை வாங்கித் தன் சட்டையை சுத்தம் செய்யும்போது தரையில் மயங்கி விழுந்த கண்ணனைக் காண நேரிட்டது.
கையிருந்த மீதிமுள்ள தண்ணீரை கண்ணனின் முகத்தில் தெளித்ததுடன் ஏற்கனவே அறிமுகமான நண்பன் கண்ணன் என்பதைப் புரிந்துகெண்டான்.
புறாவின் செய்கையால் தான் கண்ணனுக்கு உதவ முடிந்ததாக அவன் நண்பன் தெரிவித்ததும் புறாவைக் கண்ட கண்ணனின் கண்ணில் நீர் ததும்பியது. புறாவைப் பார்த்ததும் கண்ணன் அதிர்ச்சியுற்றதுடன் ஆனந்தமுமடைந்தான்.
காலையில் கண்ணன் தன்னால் காப்பற்றப்பட்ட புறாவின் நன்றியுணர்ச்சியினைக் கண்டு மிகவும் பெருமிதம் கொண்டான்.
கண்ணனுக்கு உதவியதின் மூலம் சந்தோஷமான புறா மீண்டும் வானில் உல்லாசமாக பறக்கத் தொடங்கியது.
னவீன எலி கதை பழைய கதையில் எலி சிஙத்தை காப்பாற்றியது யாரும் அறிந்தது இது நவீன நட்றி பகரும் கதை அருமையாக இருக்கிறது. காபி ரைட் ரெடி பன்னிடுங்க யாரானும் கதையை அபேஸ் பன்னிடபோராங்க
தலைப்பு: உல்லச புறா என்பதைவிட உபகார புறா என்றிருகலம்….. வாழ்துக்கள்
உல்லாசப்புறா மனதிற்கு மிகவும் உல்லாசமாக இருக்கின்றது
உல்லாசபுறா இதமான சிறுகதை. நன்றி பாச்ந்தி
உல்லாசப்புறா சிறுவர்களுக்கான நல்லதொரு சிறுகதை
நல்லது செய்தால் நல்லது நடக்கும் என்பதனை மறுபடியும் புரிய வைத்த கதை.
தொடருட்டும் பாசந்தியின் கலைப் பணி.
மிகவும் நன்றாக இருந்தது
கதை மீண்டும் மீண்டும் படிக்க ஆவலாய் உள்ளது
மிகவும் நன்றாக உள்ளது
மிகவும் அருமை
கர்பனை மிகவும் ப்ரமாதம்
வாழ்க தாஙலின் கர்பனை வலம்.
அர்த்தமுள்ள சிறுகதை.. !!
உல்லாச புறா சிறுகதை மிகவும் நன்றாக உள்ளது
உங்கல் பனி தொடரட்டும் வத்துகல்
அன்பு சந்தானம அவர்கட்கு
கதையின் கருத்து அருமை. எளிய நடை. எறும்பும் புறாவும் கதை நினைவிற்கு
வந்தது. பாராட்டுக்கள். நிலாச் சாரலில் எனது படைப்புக்களை அனுப்பலாமா? விவரம் தெரிவிக்கவும் சாவித்திரி, நளாயினி. மீரா. பற்றிய லிங்க் அனுப்புகிறேன் என்றீர்களே தமிழில் மெயில் கட்டுரை அனுப்புவது பற்றியும் கூறியிருந்தீர்கள்/ பதிலுக்காக ஜெயந்தி நாகராஜன்