நமக்கு நன்றாகவே தெரியும், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி எவ்வளவு அவசியமென்று. ஆனாலும் அதை ஒத்திப்போடவோ அல்லது தவிர்க்கவோ நொண்டிச் சாக்குகள் சொல்லி நம்மையே சமாதானம் செய்து கொள்வோம். ‘மூக்கு கொண கொண வென்று இருக்கிறது, வானத்தில் மேகமாயிருக்கிறது, மழை வரலாம்’ என்பதெல்லாம் சில சாக்குகள்.
இது மாதிரி உடற்பயிற்சிகளை செய்யாமல் தவிர்ப்பதற்கு – நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதற்கு வழக்கமாகச் சொல்லப்படும் காரணங்கள் இவையென்று பட்டியலிட்டுச் சொல்கிறார்கள்!
- தினம் உடற்பயிற்சி செய்வது போர் அடிக்கிறது
- எனக்கெங்கே நேரம் இருக்கிறது?
- ஜிம் சென்று உடல் பயிற்சி செய்வதில் செலவு மிகவும் அதிகமாகிறது (அதை யார் கொடுப்பா?)
- வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு ஜிம்முமே இல்லியே!
- உடல் பயிற்சி சாதனங்களை வாங்கி எனக்குக் கட்டுபடியாகுமா?
- நான் கொஞ்சம் குண்டுதான், ஆனால் என் குடும்பத்தில் எல்லோருமே சற்று பருமன்தானே! அது குடும்பவாகு!
- வயசோ ஏறிக்கொண்டே போகிறது. இனிமே என்னத்தே உடல் பயிற்சி ஆரம்பிச்சு! என்னத்தே காணப் போகிறேன்!
- என் கூட சேர்ந்து உடற்பயிற்சி செய்ய யாருமே கம்பெனி இல்லியே!
- உடல் பயிற்சி செய்தவுடன் உடம்பு ரொம்ப களைப்பாகி விடுகிறது.
இந்தக் காரணங்கள் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?
இப்படி ஒழுங்காக தினசரி வாழ்க்கையில் உடற்பயிற்சியை செய்ய இயலாமல் தவி(ர்)ப்பவர்களுக்கு இங்கிலாந்து தேசிய ஆரோக்கிய சேவை (NHS) ஒரு ஆலோசனை தருகிறது. உடலுறவே ஒரு சிறந்த உடற்பயிற்சி என்கிறது அது.
உடல் உறவு என்பது பேசத் தகாத வார்த்தையோ அல்லது ஒழுங்கீனமானதோ அல்ல. முறையான, கட்டுப்பாடான உடல் உறவுகள் மாரடைப்புகளுக்கான அபாயத்தைத் தவிர்ப்பதோடு வாழ்நாளை அதிகப்படுத்தவும் செய்கின்றனவாம்!
அந்த சமயத்தில் உருவாகின்ற ‘எண்டார்பின்’ நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்துகிறதாம்! நெறிமுறையான உடல் உறவுகள் உடல், மன ஆரோக்கியங்களுக்கு பெரிதும் உதவுகின்றன என்பது உறுதியானாலும், புற்றுநோயை எதிர்க்கும் சக்திகளை அதிகப்படுத்துவதற்கான அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இல்லை என்கிறார் மருத்துவ நிபுணர் மெல்லிசா சாயர்.
இருந்தாலும் உடல் சுருக்கங்கள் குறைந்து, மேனி பளபளப்பாவதற்கும், இளமையான தோற்றத்திற்கும் உடல் உறவின் போது அதிகரிக்கும் எண்டார்பின்களே உதவுகின்றன. தவிர, ஈஸ்ட்ரொஜன் மற்றும் டெஸ்ட்டோஸ்டீரான் ஹார்மோன்கள் உடல் எலும்புகளையும், தசைகளையும் ஆரோக்கியமாக வைப்பதோடு மட்டுமின்றி உள்ளும் புறமும் ஒரு உற்சாக உணர்ச்சியை அளிக்கிறது என்று ஆய்வு கூறுகிறது.
இந்தப் பயிற்சியைத் தவிர்க்க யாரும் முயற்சி செய்ய மாட்டார்கள் என நம்பலாம்!!
(நன்றி : news.bbc.uk)
மிகவும் சரியானது. இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி என் உடம்ப ரணகளம் ஆக்கிடறீங்களே.
எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலியே, நான் என்ன செய்யட்டும்.
ணல்ல கருத்து நன்ரி
னல்ல உருப்படியான தகவல்
இங்க இதுக்கு முக்கியதுவம் இல்ல உடல் பயிர்ச்சிக்கு மட்டும்தான்…..
இங்க இதுக்கு முக்கியதுவம் இல்ல உடல் பயிர்ச்சிக்கு மட்டும்தான்…..
இது பலய்ய நெந்ச்ப
உடர்பயிர்சி பயிர்சி மட்டும் கூருஙல்
னல்ல விசியம்தான்
GOOD .BUT I AM NOT GOING TO GYM. I AM WORKOUT AT MY HOME. SO ITHINK THIS IS VERY PROBLEM
இது நல்லாதன் இருகு ஆனா எனகு இனும் கல்யானம் ஆகலிய அப்ப நா என்ன பன்ன?
எப்படி இருந்த நான் இப்படி ஆயீட்டென்
அருமையன கருத்து
இந்த உடர்ப்பய்ர்ச்சி மிகவும் அருமையன உடர்பயிர்சி பயிர்ச்சி ஆகும். ஆனல் கல்யானம் ஆகதவர்க்கு சிரமம் தான். பரவாயில்லை விலை மாதுவிடம் பயிர்ச்சி செய்யலாம். உடல் ஆரேக்கியம் தேவை என்ரால் இப்படி செய்துதானே வேன்டும்…
னம்ம வூர் சப்பாடுக்கு இந்த பயிர்ச்சி ஒத்து வராது……
Good Messege.
அருமையாக உள்ள்து.
சும்ம சொல்லக் கூடாது அத்தனைஉம் உன்ன்மை
udal romba veek aaidum
இது நல்ல விசயம்