உருளைக்கிழங்கு சீஸ் பக்கோடா

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு – 4 (வேக வைத்தது)
சீஸ் – 1 கப் (துருவியது)
பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)
பூண்டு விழுது – 1 மேஜைக்கரண்டி
மிளகுத் தூள் – ½ மேஜைக்கரண்டி
மிளகாய்த் தூள் – 1 மேஜைக்கரண்டி
பிரட் – 10 துண்டுகள்
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கை மசித்துக் கொள்ள வேண்டும். பின், அதில் துருவிய சீஸ், பூண்டு விழுது, பச்சை மிளகாய், மிளகுத் தூள், மிளகாய்த் தூள், உப்பு ஆகியவை சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். பின்பு, பிரட் துண்டுகளின் ஓரங்களை நீக்கிவிட்டு, அதனை நீரில் நனைத்து, அதன் நடுவே உருளைக்கிழங்குக் கலவையை வைத்துப் பந்து போன்று உருட்டிக் கொள்ள வேண்டும். பிறகு, வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்குத் தேவையான எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அதில் உருண்டைகளைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்க வேண்டும். சுவையான உருளைக்கிழங்கு சீஸ் பக்கோடா ரெடி! இதனைத் தக்காளி சாஸ் அல்லது கெட்சப் உடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

சாப்பிட்டுப் பாருங்கள்! உங்கள் அனுபவத்தை மறவாமல் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

About The Author