ஒயின் ஷாப்புக்கு நான்
போவதில்லை – உன்
ஓரப்பார்வை தரும்
போதை எனக்குப் போதும்!
வேரைப் பிரிகின்ற வேளையில்
மண் செய்யும் பிடிவாதம் போல..
என் பார்வை
உன்னோடு ஒட்டிக்கொண்டு போகிறது.
மொட்டை மாடியில் நான்
உன் வீட்டு வாசலில் நீ
மொட்டை மாடியின் ஈரத் துணிகளை
சூரியன் உறிஞ்சிக் கொண்டிருந்தது!
என் உயிரை
உன் பார்வை உறிஞ்சிக் கொண்டிருந்தது!
என் அப்பா
ஏதேதோ மெனக்கெட்டுப் பார்த்தார்
பட்ட மரம் தளிர்க்க..
பாவம் அவருக்குத் தெரியவில்லை
உன் பார்வை பட்டால்
பட்ட மரம் தளிர்க்கும் என!
can feel ur words good
good