உன்னோடு இருந்திருப்பேன்…

உன்னோடு இருந்திருப்பேன்…

சுகம் தரும் உலகம் தான்,
பல நண்பர்கள் என்னோடு,
விரும்பிய நேரமெல்லாம் விளையாட்டு தான்;
இருந்தென்ன பயன்
உன் சுட்டு விரல் தீண்டலின்றி?
தாயே உன் கணினியாய் நானிருந்திருந்தால்
உன் ஸ்பரிசமாவது கிடைத்திருக்கும்….

கல்லா மனிதன் மனம்?

ஏதோ நினைவுடன்
தனியே நடக்கையில்
ஓரு கல்லில் கண்டேன்,
ஒற்றை இதழுடன் மஞசள் மலர்
குட்டுப் பட்டதாய் உணர்ந்தேன்
யார் ஒப்பிட்டது
மனிதர் மனத்தைக் கல்லோடு………

நண்பா நீ என் வேர்!!

இன்ப நொடிகளில்
கனவுக் காலங்களில்,
வெற்றித் தருணங்களில்
உன் நினைவுகள் வருவதே இல்லை
ஆனால் தோல்வியின் துயரத்தில்
மனம் விரிசல் காண்கையில்
வாழ்க்கை உலர்ந்து கிடக்கையில்
பற்றற்று மரமாகிப் போகையில்-தான்
உணர்ந்து கொள்கிறேன்
என் வேர் நீயென்று…..”

About The Author

3 Comments

  1. BOWMAN

    எதார்த்தமான கவிதைகள் . நன்றாக இருக்கின்றன.

Comments are closed.