அகம்பனன் – ராவணனிடம் ராமனைப் பற்றிக் கோள் சொன்னவன். (போட்டுக் கொடுத்தவன்). ராமனின் அம்புக்குத் தப்பிப் பிழைத்த அதிசய ராட்சஸன்.
அத்திரி – பத்தினி அனுசூயாவின் கணவர். ராமதரிசனம் பெற்றவர்.
கரன், தூஷணன் – ராவணனின் தம்பிகள்; ராமன் கையால் அழிந்தவர்கள்.
கும்பன் – கும்பகர்ணன் மகன்.
குசத்வஜன் – ஜனகரின் தம்பி; மாண்டவி, சுருதகீர்த்தி ஆகியோரின் தந்தை. பரத – சத்ருக்கனரின் மாமனார்.
சுநைனா – ஜனகரின் மனைவி; சீதையின் தாய். (ஒரு நடிகையின் பெயர் போல இருக்கிறதே!).
சதானந்தர் – அகல்யை, கவுதமரின் மகன். சீதையின் திருமணத்திற்கு வந்த புரோகிதர்.
சதபலி – வடக்குத் திசையில் சீதையைத் தேடச் சென்றவன்.
சுஷேணன் – வாலியின் மாமனார்; வானர மருத்துவன், மேற்குத் திசையில் சீதையைத் தேடச் சென்றவன்.
தான்யமாலினி – ராவணனின் இளைய மனைவி. (மது மாலினிக்கு உறவா?).
நிகும்பன் – கும்பகர்ணன் மகன்.
மால்யவான் – ராவணனின் தாய்வழிப் பாட்டன் (பேரனே இப்படி இருந்தால்…).
யுதாஜித் – கைகேயியின் தம்பி; பரதனின் தாய்மாமன்.
வினதன் – கிழக்குத் திசையில் சீதையைத் தேடச் சென்றவன்.
மாண்டவி – பரதன் மனைவி.
சுருதகீர்த்தி – சத்ருக்கனன் மனைவி.
ருமை – சுக்ரீவன் மனைவி.
விராதன் – தாண்டகவனத்தில் வசித்த அரக்கன்; ராமனால் சாபம் தீர்ந்தவன்.
*****