இவன் மனிதனா? சிஸ்டமா?

இங்கே
மனிதனைப் பார்க்கிறேன்

அவனுக்கான
எல்லாம் வரையறுக்கப்பட்டுள்ளன

‘எழு’
‘ஓடு’
‘உட்கார்’
‘உழை’
‘உறங்கு’
‘ஊர்சுற்று’
‘நாலு சீட்டாடு’
என அவனுக்கான ஆணைகளும் கூட

அவனது
‘ஹாய்களும்’
‘லாக்களும்’
‘நன்றிகளும்’
‘புன்னகைகளும்’ கூட
அவன் வாழும் புறாக்கூண்டுகளைப் போலவே
ஸ்டேன்டர்டைஸ் செய்யப்பட்டுள்ளன!

அவனுடைய
எல்லாம் ஒழுங்காய் இருக்கின்றன
நகரும் படிக்கட்டுகளைப் போல
ஏறும் மின்தூக்கிகளைப் போல
ஓடும் எம்மார்ட்டியைப் போல

எனக்கு
கேட்கத் தோன்றுகிறது
இவன் மனிதனா? சிஸ்டமா?

****

About The Author

1 Comment

  1. senthil bharathi

    கவிதை அருமை….இவன் மனிதன் அல்ல….
    எந்திரம் தான்!

Comments are closed.