இல்லாத போது..

1.
பத்து பொருத்தம் பார்த்து
படலமாய் பெண் பார்க்க வந்து
ஊரெல்லாம் விசாரித்து
வந்தவர்கள்
உதறிச் சென்றார்கள் என்னை
சொத்து பொருத்தம்
ஒத்து போகலையாம்

2.
பூக்களற்ற தலை
பொட்டில்லா நெற்றி
வர்ணமில்லா புடவை என
அத்தனையும் இல்லாத
அவளை அபகரிக்க
துடிக்கின்றது அரக்கர் கூட்டம்

3.
முழுதாய் கலையாத தூக்கம்
அதட்டி எழுப்பும் அலாரம்
இயந்திரமாய் பல்துலக்கி
இரண்டு நிமிட குளியல் போட்டு
காலை கோப்பி குடிக்க
நேரமின்றி வேலைக்கு
செல்கையிலே வருகிறது
வீட்டு நினைவு …

About The Author

2 Comments

  1. கீதா

    1. ஒத்துபோகாததே உத்தமமென்று
    சித்தம் தெளிந்து மகிழடி பெண்ணே!

    2.அத்தனையும் இழந்தாலும்
    அகம் கொண்ட துணிவை மட்டும்
    இம்மியளவும் இழக்கவில்லையென்று
    இறுமாந்து சொல்லடி பெண்ணே!

    3. கடுகடுத்தாலும் காப்பிக்கோப்பையை
    அடுக்களை நுழையுமுன்னே கையில் கொடுக்கும்
    அம்மாவின் நினைவும் அலுவலக வாயிலோடு
    அன்றாடம் நின்றுவிடுகிறதே….

    அனைத்தும் அருமை. தொடர்ந்து பங்களியுங்கள்.

Comments are closed.