தேவையான பொருட்கள்:
இறால் – 250 கிராம்
வெங்காயம் – 1
பூண்டு – 10 பற்கள்
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
மிளகு – 3 தேக்கரண்டி
கசகசா – 3 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
தேங்காய் – ½ மூடி
காய்ந்த மிளகாய் – 8
சோம்பு – 3 தேக்கரண்டி
சீரகம் – 2 தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, துருவிய தேங்காய், கசகசா, சீரகம், சோம்பு, மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றைப் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள்.
வறுத்த மசாலாவுடன் பூண்டு, மஞ்சள் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, வெங்காயத்தைப் பொன்னிறமாக வதக்கி, சுத்தம் செய்த இறால்களை அதில் சேர்த்து, அவை நிறம் மாறும் வரை வதக்குங்கள்.
பின்னர் அரைத்த மசாலா, உப்பு, தேவையான அளவு நீர் ஆகியவற்றையும் சேர்த்து, குறைந்த தீயில் நீர் சுண்டும் வரை வதக்க வேண்டும்.
அவ்வளவுதான்! சுவையான ‘இறால் வறுவல்’ தயார்! சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!