மனஸ்தாபத்தின்
நிழற்குடையில் நின்றபடி
பகிர்ந்து கொள்ளப்படும் சில
வார்த்தைகளை
குறிப்பெடுக்கவே செய்கின்றன
நினைவுக்கூடுகள்…
பகிராத வார்த்தைகளுக்கான
அர்த்தங்கள் கூடுகளுக்குள்
நுழைய முயற்சிக்க,
தடுக்கக் காரணங்கள்
இன்றிப் போகிறது
மெளனத்தின் சாட்சியோடு
ஓர் ஆழ்ந்த அவதானிப்பில்…
முடிவில்
பகிரப்படாமலேயே
தொலைந்து போகின்றன
உறவுகள்…
பதிலளிக்கப்படாத
கேள்விகளில்…
இருத்தல் தொலைத்த
வார்த்தைகள்தான்
எத்தனை சுதந்திரமானவை!
//பகிரப்படாமலேயே தொலைந்து போகின்றன உறவுகள்//.. அனுபவித்துப் பார்த்தவர்களுக்கு இச்சொற்களின் ஆழம் தெரியும்.