இராசிபலன்கள் (30-3-2009 முதல் 5-4-2009 வரை)

மேஷம்:-

மேஷராசி அன்பர்களே! சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். உறவினர்களின் வரவால் பொருட் செலவுகள் உண்டாகும். தீர்த்த யாத்திரை சென்று வர முயற்சிப்பீர்கள். அரசு வேலை மற்றும் உத்தியோக முயற்சிகள் வெற்றி தேடித் தரும். பழைய வழக்குகள் மீண்டும் தொடரலாம். சகோதர சகோதரிகளின் திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகளில் இருந்து வந்த தடைகள் நீங்கித் திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது. பொருளாதாரம் நெருக்கடி ஏற்படுத்தினாலும் சமாளித்துக் கொள்வீர்கள். எழுத்து, கணிதம், புத்தகம், பேங்க் சம்பந்தமான தொழிற் செய்வோர்களும் இவற்றில் பணி புரிவோர்களும் லாபம் அடைவார்கள். விவசாயம் செய்வோர்கள் கவனமுடன் செயல்படவும். புதிய வீடு நிலம் வாங்குவது சம்பந்தமான முயற்சிகளைச் சற்று கால தாமதமாகச் செய்வது நல்லது.

இராசியான எண்:-2
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-மேற்கு
பரிகாரம்:-திங்கள் கிழமையில் அம்மன் வழிபாடு செய்து பச்சரிசி தானம் செய்து வரவும்.

ரிஷபம்:-

ரிஷபராசி அன்பர்களே! ராகு நன்மை தரும் கிரகமாகும். புதிய ஆடை அணிகலன்கள், ஆடம்பர அலங்காரப் பொருட்களை வாங்குவீர்கள். தந்தையின் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டு அவர்களால் மருத்துவச் செலவுகள் உண்டாகும். பொதுநலத் தொண்டுகளில் பிரியமுடன் ஈடுபடுவீர்கள். தீர்த்த யாத்திரை சென்றுவர வாய்ப்பு உள்ளது. ஒரு சிலருக்கு வீடு மாற்றம் ஏற்படலாம். பிறருக்காக உழைப்பதில் மன மகிழ்ச்சி அடைவீர்கள். தென் திசையில் இருந்து பெண்களால் எதிர்பாராத நல்ல செய்திகள் வந்து சேரும். மாமன் வழி மூலம் சில நன்மைகளை அடைவார்கள். குல தெய்வ வழிபாடு செய்து வருவது நல்லது. கட்டிடம், மெத்தை, கட்டில் போன்ற பொருட்கள் வியாபாரம் செய்வோர்கள், கம்ப்யூட்டர், மின் சாதனப் பொருள் வியாபாரிகள் ஆகியோர்கள் நல்ல லாபம் பெறுவார்கள்.

இராசியான எண்:-4
இராசியான நிறம்;:-கருப்பு
இராசியான திசை:-வடமேற்கு
பரிகாரம்:-ஞாயிற்றுக் கிழமையில் பிதுர் மற்றும் அம்மன் வழிபாடு செய்து கோதுமை தானம் செய்து வரவும்.

மிதுனம்:-

மிதுனராசி அன்பர்களே! சனி நன்மை தரும் கிரகமாகும். கூட்டுத் தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கையால் மன நிம்மதி அடைவீர்கள். கணிதம், எழுத்துத் துறை, பிரிண்டிங், புத்தகம் போன்ற தொழில் புரிவோர்கள் லாபம் பெறுவர். தொலைதூரப் பயணங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். பிள்ளைகளின் மருத்துவச் செலவுகளுக்காகப் பொருட் செலவுகள் உண்டாகும். பூர்வீக இடத்தை விட்டுப் பெயர்ந்து செல்ல வாய்ப்பு உள்ளது. பொருளாதாரம் சுமாராகக் காணப்படும். அரசியல்வாதிகளால் ஆதாயம் இருக்காது. பிறரிடம் பணம் கொடுத்து ஏமாறாமல் இருக்கவும். சகோதர சகோதரிகளின் தடைபட்ட சுப காரியங்கள் நடை பெறும். விருந்தினர் வரவால் மன மகிழ்ச்சி உண்டாகும்.

இராசியான எண்:-8
இராசியான நிறம்:-நீலம்
இராசியான திசை:-தென்மேற்கு
பரிகாரம்:-சனிக் கிழமையில் சனீஸ்வர வழிபாடு செய்து எள் சாதம் தானம் செய்யவும்.

கடகம்:-

கடகராசி அன்பர்களே! புதன் நன்மை தரும் கிரகமாகும். திடீர் அதிர்ஷ்டமாகிய ரேஸ் லாட்டரி போன்றவற்றால் தன வரவு உண்டு. வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளைத் திருத்திக் கட்டவும், வீடு மாற்றம் செய்யவும் எண்ணுவீர்கள். பழைய வாகனங்களை விற்றுப் புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். தாய்க்கு இருந்து வந்த நோய்கள் குறைந்து காணப்படும். உறவினர்கள் மற்றும் நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். தங்கம், வெள்ளி, அழகு சாதனப் பொருள் வியாபாரிகள் நல்ல பலன்களை அடைவார்கள். கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். சூதாட்டத்தால் வீண் பொருள் விரையம் ஏற்படக் கூடும். காதல் விஷயங்களில் வெற்றி கிடைக்கும். அரசு வழக்குகளில் சாதகமான சூழ்நிலை உருவாகும். சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள்.

இராசியான எண்:-5
இராசியான நிறம்:- பச்சை
இராசியான திசை:-வடக்கு
பரிகாரம்:-புதன் கிழமையில் மஹா விஷ்ணு வழிபாடு செய்து பாசிப்பயிறு தானம் செய்து வரவும்.

சிம்மம்:-

சிம்மராசி அன்பர்களே! செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். காணாமற் போன பொருட்கள் திரும்பக் கிடைக்கும். பூமி நிலம் சம்பந்தமாகத் தடை பட்டு வந்த காரியங்களில் நல்ல முடிவுகள் கிடைக்கும். விவசாயிகள் நல்ல லாபம் பெறுவர். மாணவர்கள் கல்வியில் தேர்ச்சி அடைவர். ஒரு சிலருக்கு புதிய வீடு மற்றும் வாகனம் வாங்க வாய்ப்பு உள்ளது. வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் நல்ல தகவல்களை எதிர்பார்க்கலாம். உத்தியோகத்தில் இட மாற்றம் ஏற்படும். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிட்டு மன நிம்மதியை இழுக்க வேண்டாம். செய்தொழிலில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும். கண்களில் கவனம் தேவை. நண்பர்களால் எதிர்பாராத பொருட் செலவுகள் உண்டாகும். தூரத்து யாத்திரைகளில் புதிய பெரிய மனிதர்கள் சந்திப்பால் மன நிம்மதி அடைய வாய்ப்பு உள்ளது.

இராசியான எண்:-9
இராசியான நிறம்:-சிகப்பு
இராசியான திசை:-தெற்கு
பரிகாரம்:-செவ்வாய் கிழமையில் துர்க்கை வழிபாடு செய்து துவரை தானம் செய்து வரவும்.

கன்னி:-

கன்னிராசி அன்பர்களே! சூரியன் நன்மை தரும் கிரகமாகும். நீண்டதூரப் பயணங்களைத் தவிர்க்கவும். உடம்பில் வாதம் வாயு மற்றும் எலும்பு சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். சொத்துக்கள் சம்பந்தமான விஷயங்களில் எதிர்பார்த்த நல்ல முடிவுகள் கிடைக்கச் சற்று காலதாமதம் ஆகலாம். சகோதர சகோதரிகளுடன் காரணமில்லாத சச்சரவுகள் வந்து போகும். கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த மனக் கசப்புகள் நீங்கி உறவுகள் பலப்படும். புதிய நண்பர்கள் சேர்க்கையால் விபரீதங்களைச் சந்திக்க வாய்ப்பு உள்ளதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும். மாணவர்கள், அரசியல்வாதிகள், பொது நலத் தொண்டுகள் செய்பவர்கள், ஆலயப் பணியாளர்கள் நற்பலன் அடைவார்கள். நீண்ட காலமாக இருந்து வந்த குடும்பச் சொத்துக்கள் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டம் மூலம் பணம் வந்து சேரும். .

இராசியான எண்:-1
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-கிழக்கு
பரிகாரம்:-ஞாயிற்றுக் கிழமையில் சிவ வழிபாடு செய்து கோதுமை தானம் செய்யவும்.

துலாம்:-

துலாராசி அன்பர்களே! செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். சுய தொழில் செய்வதற்கான முயற்சிகளில் சற்று காலதாமதம் ஏற்படலாம். சகோதரர்களால் பொருள் வரவு உண்டாகும். தாயின் உடல் நிலை பாதிப்பால் மருத்துவச் செலவுகள் உண்டு. பூர்வீகச் சொத்துக்கள் வந்து சேரும். உற்றார் உறவினர்களால் ஆதாயம் இல்லை. கை விட்டுப் போன பொருட்கள் திரும்பக் கிடைக்கும். தந்தையால் பொருள் வரவு உண்டு. குலதெய்வ வழிபாட்டிற்காக வெளியூர் செல்லுவீர்கள். தந்தை மகன் உறவில் சிற்சில பிரச்சனைகள் வரலாம். உணவுப் பொருள் வியாபாரிகள், ஜவுளி, நூல் வியாபாரிகள், அரசியல்வாதிகள் ஆகியோர்களுக்கு லாபம் கிடைக்கும். மனைவி வழிச் சொந்த பந்தங்களால் பொருட் செலவு ஏற்படும். கணவன் மனைவி உறவுகள் சுமாராக காணப்படும். தேவையற்ற விஷயங்களில் தலையிட்டு மன நிம்மதி இழக்க வேண்டாம்.

இராசியான எண்:-9
இராசியான நிறம்:-சிகப்பு
இராசியான திசை:-தென்மேற்கு
பரிகாரம்:-செவ்வாய் கிழமையில் முருகன் வழிபாடு செய்து துவரை தானம் செய்து வரவும்.

விருச்சிகம்:-

விருச்சிகராசி அன்பர்களே! சனி நன்மை தரும் கிரகமாகும். பிள்ளைகளால் பொருட் செலவுகள் ஏற்பட்டாலும் அவர்களால் பண வரவு உண்டு. தீர்த்த யாத்திரை சென்று வருவதற்கான ஏற்பாடுகளில் சற்று கால தாமதம் ஏற்படும். மனைவியின் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டு அவர்களால் மருத்துவச் செலவுகள் உண்டாகும். பூர்வீகச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் சற்று குறையும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண காரியம் கை கூடும். பூ, பழம், காய்கறி வியாபாரிகள், சேர்மார்க்கெட் தொழிற் செய்வோர்கள் லாபம் அடைவார்கள். வங்கிகள் மூலம் எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கச் சற்று கால தாமதம் ஆகலாம். கண்களில் கவனமுடன் இருத்தல் நல்லதாகும். விவசாயம் செய்வோர்கள் மிகுந்த கவனமுடன் இருக்கவும். புதிய நிலம் வாகனம் வாங்கலாம்.

இராசியான எண்:-8
இராசியான நிறம்:-நீலம்
இராசியான திசை:-தெனமேற்கு
பரிகாரம்:-சனிக் கிழமையில் ஐயப்பன் வழிபாடு செய்து எள் சாதம் தானம் செய்து வரவும்.

தனுசு:-

தனுசுராசி அன்பர்களே! கேது நன்மை தரும் கிரகமாகும். வீடுகளைத் திருத்திக் கட்ட எண்ணுவீர்கள். நெடு நாட்களாக வராத கடன் கொடுத்த பணம் திரும்ப கை வந்து சேரும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வரவால் பொருட் செலவுகள் உண்டாகும். தொலை தூரப் பயணங்கள் மூலம் எதிர் பார்த்த காரியங்கள் கை கூடும். தெய்வத் தொண்டுகளைப் பிரியமுடன் செய்வீர்கள். அரசு சம்பந்தமாகிய வழக்கு விஷயங்களில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கச் சற்று காலதாமதம் ஆகலாம். பெரியவர்களின் நல்லாசிகள் கிடைக்கும். இரும்பு, இயந்திரம், இரசாயன சம்பந்தமான தொழிற் செய்வோர்கள் நல்ல லாபம் அடைவார்கள். மாணவர்கள் கல்வியில் மிகுந்த கவனமுடன் இருப்பது நல்லது. சிலர் இருப்பிடம் விட்டு வெளியூர் செல்ல வாய்ப்பு உள்ளது.

இராசியான எண்:-7
இராசியான நிறம்:-கருஞ்சிகப்பு
இராசியான திசை:-வடமேற்கு
பரிகாரம்:-திங்கள் கிழமையில் கணபதி வழிபாடு செய்து செவ்வாடை தானம் செய்யவும்.

மகரம்:-

மகரராசி அன்பர்களே! புதன் நன்மை தரும் கிரகமாகும். புதிய வீடு மற்றும் நிலங்கள் வாங்குவீர்கள். அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டு. மூத்த சகோதரரால் பொருட் செலவுகள் ஏற்படும். கணவன் மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும். வேற்று மதத்தவரால் ஆதாயம் உண்டு. உடம்பில் மூலம் மற்றும் உஷ்ண சம்பந்தமான பீடைகள் வந்து தீரும். விருந்தினர்களின் எதிர்பாராத வரவால் பொருள் விரையமாகும். நீண்ட தூரப் பயணங்களால் மன நிம்மதி ஏற்படாது. பழைய கடன்கள் மீண்டும் தொல்லை கொடுக்கும். அடுத்தவர் வீட்டுச் சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள். வீடுகளில் பணம் பொருட்கள் திருட்டுப் போக இருப்பதால் எச்சரிக்கை தேவை. ரேஸ், லாட்டரி போன்றவற்றின் மூலம் எதிர்பாராத தனவரவு உண்டாகும்.

இராசியான எண்:-5
இராசியான நிறம்:-பச்சை
இராசியான திசை:-வடக்கு
பரிகாரம்:-புதன் கிழமையில் மஹாவிஷ்ணு வழிபாடு செய்து பாசிப் பயிறு தானம் செய்து வரவும்.

கும்பம்:-

கும்பராசி அன்பர்களே! சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். விவசாயம் செய்வோர்கள் விவசாயத்தில் மிகுந்த கவனமுடன் இருத்தல் நல்லது. உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படும். பெண்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். பொது நலத் தொண்டு நிறுவனத்தினர்கள் அநாதை ஆசிரமம் நடத்துவோர்கள், அறநிலையத் துறை சார்ந்தவர்கள் ஆதாயம் பெறுவார்கள். உடம்பில் நரம்பு, எலும்பு சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் நல்ல தகவல்களை எதிர்பார்க்கலாம். வங்கிகளில் இருந்து வரவேண்டிய பணம் மற்றும் வங்கிக் கடன் உதவிகள் கிடைக்கும். பழைய கடன்கள் அடைபடும். யாத்திரை விலக்குதல் நல்லது. தூரத்து நற்செய்திகளை கேட்பீர்கள். திடீர் அதிர்ஷ்டம் வழியாகத் தன வரவு உண்டாகும்.

இராசியான எண்:-6
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-தென்கிழக்கு.
பரிகாரம்:-வெள்ளிக் கிழமையில் மஹாலட்சுமி வழிபாடு செய்து மொச்சைப் பயறு தானம் செய்யவும்.

மீனம்:-

மீனராசி அன்பர்களே! வியாழன் நன்மை தரும் கிரகமாகும். வட திசையில் இருந்து எதிர்பாராத தன வரத்து உண்டு. மனைவியின் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டு அவர்களால் மருத்துவச் செலவுகள் வந்து சேரும். விருந்தினர் வரவால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். தேவையற்ற மன சஞ்சலமும் குழப்பங்களும் குடும்பத்தில் வரக்கூடும். புதிய நண்பர்களைச் சேர்ப்பதைத் தவிர்க்கவும். மின் சாதனப் பொருட்கள், காவல்துறை, ராணுவம், கம்ப்யூட்டர் போன்ற துறை சார்ந்தவர்கள் லாபம் பெறுவார்கள். வேற்று மதத்தவர்களால் எதிர்பாராத ஆதாயங்கள் கிடைக்கும். உடம்பில் வாயு மற்றும் வயிறு சம்பந்தமாகிய தொல்லைகள் வந்துபோகும். காதல் விஷயங்களில் மிகுந்த கவனமுடன் இருக்கவும். பங்காளிகளாலும், நண்பர்களாலும் சில தொல்லைகள் ஏற்படலாம்.

இராசியான எண்:-3
இராசியான நிறம்:-மஞ்சள்
இராசியான திசை:-வட கிழக்கு
பரிகாரம்:-வியாழக் கிழமையில் சிவ வழிபாடு செய்து கடலை தானம் செய்யவும்.

**************

Gnanayohi Dr. P. Esakki, I.B.A.M., R.M.P., D.I.S.M
18 (25B/1), Pulavar Street,
Krishnapuram,
Kadayanallur – 627 759
Tirunelveli District, Tamil Nadu, India.
Phone : 04633-243029,
Mobile: 98425-10578, 98425-29691,
Fax: 04633 -240390
Website:- www.gnanayohi.com

About The Author

1 Comment

  1. கவி.செங்குட்டுவன்

    தங்களின் பணி சிறப்பானது. பாராட்டுக்கள்.

    கவி.செங்குட்டுவன்
    ஊத்தங்கரை- 635207.
    9842712109

Comments are closed.