கனவைப் போல்
நிலையில்லாது மாறும் உலகில்
கற்றறிந்தவர் அடையவேண்டிய
இரு வழிகள் இவை
தத்துவஞான
அமிர்த வெள்ளத்தில்
புரண்டு மிதந்து
கடினமாய் காலம் கழித்தல்
திறமை மிக்க குருவான
பேரழகியின்
பருத்த மார்பகங்களில்
பள்ளி கொண்டு
காலம் கழித்தல்.
****
பாபம் போக்குவதற்கு
கங்கை நதிக்கரையில்
வசிக்க வேண்டும்
அல்லது
மனதைக் கொள்ளை கொள்ளும்
மாலையணிந்த மங்கையின்
மார்பகங்களில்
வசிக்க வேண்டும்.
(சமஸ்கிருத செய்யுட்களின் தமிழ் மொழியாக்கம்)
(பரத்ருஹரின் சுபாஷிதம் மின்னூலில் இருந்து)
“