இனிய மகளே! Posted by தமிழ்நம்பி Date: December 07, 2009 in: பூஞ்சிட்டு Leave a comment share 0 0 0 0 கன்னற் சாறே, கனியமுதே!கருத்தில் இனிக்கும் தமிழமுதே!என்னை மகிழ்ச்சிக் கடலாழ்த்தஇனிய மகளாய் வந்தவளே!உன்னின் அறிவும் வளர்த்திடுவாய்!ஒழுக்கம் அறங்கள் போற்றிடுவாய்!இன்னா கொடுமை இவ்வுலகில்இல்லா தாக்க எழுவாயே!