அயல் நாட்டில் நான் அலைந்து திரிந்தால்
"பயலே! நீ இந்தியன்" என்று நாள் பார்த்து
அனுப்பிவிடுவார்கள் பாரதத்திற்கு.;
இந்தியாவில் இங்கும் அங்கும் திரிந்தால்
அனந்தபுரி ஊர், மலையாளி இனம் என்பார்கள் ;
அனந்தபுரி வந்தால் "நீ பாண்டி" என்பார்கள்;
பாண்டி என்ற தமிழ் நாட்டிற்கு வந்தால்
"பச்சைத் தமிழன் அல்ல நீ! இந்த ஜாதி" என்பார்கள் ;
சாதியிடம் வந்தால்
" பார்த்தால் ,இல்லையே
எங்களவன் இல்லையே" என்று விடுவார்கள் !
"பகுத்து அறிந்து வாழ்பவன்
நான். மனிதன்" என்றால்
"நீ பைத்தியக்காரன் .
நீக்கி வைக்கிறோம்" என்பார்கள் !
பால் வாங்க போன் வாங்க
நிலம் வாங்க வீடு வாங்க
எது வாங்கவும் அட்டை கேட்பார்கள் ;
அட்டை வாங்க இனம் கேட்பார்கள் .
இனம் சொல் ஏற்றுக் கொள்கிறோம் என்பார்கள் .
இனம் இல்லை என்று ஆண்டவனே வந்தாலும்
இல்லை இங்கு உனக்கு இடம்மில்லை என
இறுதியாகச் சொல்லி அனுப்பிவிடுவோம் என்பாவார்கள்!
மிக்க உன்மை!