அந்த இரண்டு அதிகாரிகள் பேசிக்கொண்டார்கள்:
"என்னிடம் வேலை பார்க்கும் சார்ஜென்டுகள் மிகவும் கெட்டிக்காரர்கள்" என்று ஒருவர் சொல்ல, மற்றவர் " எனக்கும் அப்படி சொல்லத்தான் ஆசை.. ஆனால்… " என்றார்.
முதல் அதிகாரி, "உன்னாலும் தாராளமாகச் சொல்ல முடியும் – உனக்கும் என்னைப்போல பொய் சொல்ல முடியும் என்றால்…”
அந்த ராணுவ வீரர்களுக்கு மலை ஏற்றப் பயிற்சி…
ஒருவன் தவறிக் கீழே விழுந்து கொண்டிருந்தான். மற்றவன் கேட்டான், " ஏதாவது அடிபட்டு விட்டதா?’ என்று.
முதல் வீரன் சொன்னான். "தெரியவில்லை.. இன்னும் நான் கீழே விழுந்துகொண்டுதான் இருக்கிறேன். விழுந்தபிறகு சொல்கிறேன்" என்று.
மூன்று கடற்படை வீரர்கள் காட்டு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்கள். அப்போது இரண்டு தடங்கள் குறுக்கிட்டன. ஒருவன் சொன்னான், “இவைகள் காட்டு மானுடைய தடங்கள்”என்று. இன்னொருவன், “இல்லை, இவை புலிகளுடைய தடங்கள்”என்று சொல்ல மூன்றாமவன், ”இல்லை, இல்லை, இவை காட்டெருமையின் தடங்கள்”என்று வாதிட்டான். இப்படி இவர்கள் வாதிட்டுக்கொண்டிருக்கையில் அந்தத் தடங்களில் வந்த ரயில் அவர்கள் மீது மோதிவிட்டுச் சென்றது.
அந்த விமானப் படை அதிகாரிக்கு அப்போதுதான் பதவி உயர்வு கிடைத்து ஜப்பானுக்குச் சென்றிருந்தார். அவருக்குப் பிரமாதமாக எல்லா வசதிகளுடனும் அலுவலகம் கொடுக்கப் பட்டிருந்தது. அப்போது அவரைப் பார்க்க சீருடையில் ஒருவன் வந்தான். அவனுக்கு முன்னால் தான் எவ்வளவு பெரிய ஆள் என்று காண்பித்து தற்பெருமை அடித்துக்கொள்ள அந்த அதிகாரிக்கு ஆசை. அதனால் அவன் முன்னால் போனை எடுத்து, பெரிய பெரிய அதிகாரிகளுடன் பேசுவதுபோலப் பேசினார். ஒவ்வொருவரையும் அந்தரங்கமாக எனக்குத் தெரியும் – நெருங்கிய நண்பர்கள் என்று காண்பித்துக் கொண்டிருந்தார்.
பின்னர், வந்தவன் பக்கம் பெருமையோடு திரும்பி ”எதற்காக வந்திருக்கிறாய்?” என்று கேட்டார். வந்தவனும் அப்பாவித்தனமாக, " நீங்கள் இதுவரை பேசிக்கொண்டிருந்தீர்களே அந்தத் தொலைபேசிக்கு கனெக்ஷன் கொடுக்க வந்திருக்கிறேன்" என்றான்.
ராணுவ இஞ்சினீயர் ஒருவர் தன்னிடம் பயிற்சிக்காக வந்தவர்களிடம், இயந்திரமயமாக்குவதால் உள்ள நன்மைகளைக் கூறினார். அப்போது பயிற்சிக்கு வந்த ஒருவன், "சார், நான் ஐம்பது பேரின் வேலையைச் செய்யும் ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறேன்" என்று சொன்னான்.
பயிற்சியாளர் வியப்புடன், ‘என்ன அது?"என வினவ, " இருநூறு சிப்பாய்கள்" என்றான்.
“