இது ராணுவச் சிரிப்பு (1)

நகைச்சுவை இல்லாத இடமே கிடையாது. ராணுவத்தில் வேலை பார்ப்பவர்கள் என்றால் எப்போதுமே சீரியஸாக இருப்பார்கள் என்று நினைக்க வேண்டாம். அங்கும் நகைச்சுவைக்குப் பஞ்சமில்லை – சில அவர்களை அறியாமலே வருபவை. இங்கே நாம் ராணுவத்தில் நடக்கும் கூத்துக்களில் பங்குகொள்ளப் போகிறோம்.

“நீங்கள் வேலையில் கவனக் குறைவாக நடந்து கொண்டதற்காக உங்களுக்கு தண்டனை ஒரு மாத சஸ்பென்ஷன் அல்லது இருபது நாள் சம்பளம். இதில் எதைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்?”என்றார் உயர் அதிகாரி.

அப்பாவியான அந்த சிப்பாய் சொன்னான், "எனக்கு இருபது நாள் சம்பளத்தையே கொடுத்துவிடுங்கள்"

*****

அது ஒரு ஓவியக் கண்காட்சி. "சிப்பாய்கள் தங்கள் பணியில்" என்ற தலைப்பில் இருந்த ஒரு ஓவியத்தை ரசித்துக் கொண்டிருந்த ஒரு பார்வையாளர், "எவ்வளவு நன்றாக இருக்கிறது! அப்படியே உயிரோட்டத்துடன் இருக்கிறது" என்று பாராட்டினார்.

பக்கத்திலிருந்தவர், "ஆனால், அதில் ராணுவத்தினர் வேலை செய்யாமல் சும்மா இருப்பது போலல்லவா இருக்கிறது?”என்றார்.

”அதனால்தான் சொன்னேன் உண்மைக் காட்சி போலவே இருக்கிறது என்று"

*****

ஒரு மேலதிகாரி தனக்குக் கீழ் ராணுவத்தில் வேலை பார்ப்பவர்களின் வேலைத்திறன் பற்றி அளித்த சில குறிப்புகள்:

“அவனுக்குக் காமிராவைப்போல ஞாபக சக்தி – ஆனால் லென்ஸ் தான் மூடியுள்ளது"

"உபயோகப்படுத்துவதற்கு முன்னாலேயே தனது மூளையை விஞ்ஞானத்திற்கு தானம் செய்துவிட்டான்"

"இவனுக்கு இரண்டு மூளை – ஒன்றைக் காணோம் – இன்னொன்று காணாமற்போன மூளையைத் தேடிக் கொண்டிருக்கிறது."

"அவன் அவ்வளவு மூளையற்றவன். ஒளி கூட அவனைக் கடந்து செல்லும்போது வளைந்துதான் போகும்."

"மூளைக்கு வரி விதித்தால் நிச்சயமாக இவனுக்கு வரிவிலக்கு கிடைக்கும்."

"அவனுடைய யோசனைகளுக்கு நீங்கள் ஒரு ரூபாய் கொடுத்தால் அதற்குக்கூட பாக்கி சில்லறை கிடைக்கும்."

"அறுபது நிமிஷத்தைப் பார்ப்பதற்கு அவனுக்குத் தொண்ணூறு நிமிஷங்கள் ஆகும்."

*****

About The Author