கட்டுரைத் தலைப்பைப் பார்த்து பயந்து ஓடாமல் சுண்டெலியால் தொடுப்பை சொடுக்கி உள்ளே வருகை தந்தமைக்கு மிக்க நன்றி!
தொழில்நுட்ப வார்த்தைகளை ‘தமிழ்ப்படுத்துகிறேன் பேர்வழி’ என்று நம் பேச்சு வழக்கில் புழங்காத வார்த்தைகளைத் தொடுத்து உங்களைக் கஷ்டப்படுத்த விரும்பவில்லை. அதனால், அப்படி அப்படியே ஆங்கிலத்தமிழ் ‘படுத்தியே’ கொடுத்து விடுகிறேன்.
இணைய உலாவிகளில் மேம்பட்ட வசதிகளை வழங்க உதவும் பிரவ்சர் ஆட்-ஆன்ஸ் (Browser add-ons) எனப்படுவனவற்றை விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது. இதை இது பற்றி இதுவரை அறிந்திராதவர்களுக்காக தொகுத்திருக்கிறேன்.
ஆட்-ஆன்ஸ் என்றால் என்ன?
வீடு கட்டுகிறோம்; பார்த்துப் பார்த்து அடிப்படைத் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொண்டு கட்டி முடிக்கிறோம். பின்னர், சிறிது காலம் கழித்து ஒரு நாய் வாங்கினால் அதற்கென்று சிறு வீடு போன்ற மரத்தினாலான அமைப்பை ஏற்படுத்த எண்ணுகிறோம். அல்லது, வாட்ச்மேனின் தேவை ஏற்பட்டு அவருக்கென்று ஒரு ஷெல்டர் கட்ட வேண்டியதாகிறது. அல்லது, நமக்கு வரும் தபால்களை வாங்கும் பொருட்டு கேட்டில் ஒரு சிறு தபால் பொட்டியைப் பொருத்தி விடும் அவசியம் ஏற்படுகிறது. இது போன்ற, பின் தேவைகளுக்காக, அவை சம்பந்தமான வேலைகளைத் துரிதப்படுத்துவதற்காக சில ஏற்பாடுகளைச் செய்கிறோம் அல்லவா.. அதே போன்ற விஷயம்தான் Add-ons. இவை குறிப்பிட்ட பணியைச் செய்ய விழையும் சிறு / குறு கணினி புரோகிராம்கள். Browser வழங்காத கூடுதல் வசதிகளை இவை தருகின்றன.
பின்வருவன அவற்றில் சில வகைகள்:
Extensions
Themes
Dictionaries
Search bar
Plugins
இவற்றை உருவாக்குபவர் யார்?
Add-ons developers என்று கூறப்படும் தனி மனிதரிலிருந்து பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை இந்த சேவையைச் செய்கின்றனர். பெரும்பாலும், இந்த add-ons இலவசமாகவே கிடைக்கின்றன. நிலாச்சாரலுக்காக தன்னார்வலர்களாக வந்து வேலைகளைப் பகிர்ந்து கொள்ளும் அன்புள்ளங்களைப் போன்று உலகம் முழுவதிலும் உள்ள கணினி ஆர்வலர்கள் தங்கள் ஓய்வு நேரங்களில் இந்தப் பணிகளைச் செய்கின்றனர்.
எல்லா browserகளும் இந்த add-onஸை சப்போர்ட் செய்கின்றனவா?
ஆம்! ஏறக்குறைய அனைத்து browserகளும் சப்போர்ட் செய்கின்றன. பிரபலமாக விளங்கும் சில உலாவிகள் :
1. Internet Explorer
2. Firefox
3. Opera
4. Netscape Navigator
5. Thunderbird
6. Sunbird
உபயோகங்கள்
இவை தரும் வசதிகள் கணக்கிலடங்கா. Firefox, Thunderbird, Sunbird போன்ற உலாவிகளை ஏற்படுத்தித் தந்திருக்கும் Mozilla நிறுவனம் ஏறத்தாழ 7000 ஆட்-ஆன்ஸ்களை தனது தளத்தில் போட்டு வைத்திருக்கிறதாம்! உலகம் முழுவதிலுமிருந்து இதுவரை கிட்டத்தட்ட 1000 மில்லியன் தடவைகள் இந்த ஆட்-ஆன்ஸ் டவுன்லோட் செய்யப்பட்டிருக்கின்றனவாம்!
சில உபயோகமான ஆட்-ஆன்ஸ் :
நெருப்பு நரி (firefox) எனக்குப் பிடித்த உலாவி என்பதால் அது தொடர்பான ஆட்-ஆன்ஸ் பற்றிய சில விவரங்கள் இங்கே.
ஸ்ட்ரீமிங் தளங்களிலிருந்து எளிதாக ஆடியோ/வீடியோக்களை இறக்க..
https://addons.mozilla.org/en-US/firefox/addon/7447
FTP மூலம் ஃபைல் டிரான்ஸ்பர் செய்ய..
https://addons.mozilla.org/en-US/firefox/addon/684
ஜிமெயிலில் மேம்பட்ட வசதிகளைப் பெற..
https://addons.mozilla.org/en-US/firefox/addon/8257
செய்ய வேண்டிய வேலைகளை ஞாபகப்படுத்த..
https://addons.mozilla.org/en-US/firefox/addon/1191
ஜிமெயிலில் மெயில் வந்தால் உடனடியாக தெரியப்படுத்த..
https://addons.mozilla.org/en-US/firefox/addon/173
அடிக்கடி செல்லும் தளங்களை புக்மார்க் செய்து கொள்ள..
https://addons.mozilla.org/en-US/firefox/addon/2410
உலகக் கடிகாரங்களில் நேரம் பார்க்க..
https://addons.mozilla.org/en-US/firefox/addon/1117
எதை வேண்டுமானாலும் டவுன்லோட் செய்ய..
https://addons.mozilla.org/en-US/firefox/addon/201
ஏன் ஆட்-ஆன்ஸுக்கு இவ்வளவு முக்கியத்துவம்?
உலாவியிலேயே பல வேலைகளை முடித்து விடுவதென்பதுதான் இதன் தனித்துவம். வேறெந்த தனிப்பட்ட சாஃப்ட்வேர்களும் தேவையில்லை. தனிப்பட்ட சாஃப்ட்வேர்களில் கூடுதல் வசதிகள் இருந்த போதிலும், ஆட்-ஆன்ஸ் தருவது அடிப்படையில் போதுமான, எளிமையான பயன்பாடுகள் (sleek and simple). நினைவகத்தையும் அதிகம் சாப்பிடாது என்பது குறிப்பிடத்தக்கது.
உபயோகப்படுத்திப் பாருங்கள்; பயன் பெறுங்கள்.
“
எப்படி ரிஷி இப்படியெல்லாம் கலக்குறீங்க? வீட்டில் கணிணி முன் உட்கார்ந்து ஆராய்ச்சி பண்ணுவதைத் தவிர வேறு எந்த வேலையும் செய்வதில்லை போலிருக்கு! இருந்தாலும் பயனுள்ள தகவல்கள். வாழ்த்துக்கள்.
என்ன செய்வது சந்தோஷி! கணினி என்பதும் மூச்சுடன் கலந்து விட்ட ஒன்றாகி விட்டது! வேண்டியவர்கள்” திட்டுகிறார்கள் எப்பப் பாரு கம்ப்யூட்டரைக் கட்டிக்கிட்டே அழுன்னு. இருந்தாலும் இப்படி மனப்பூர்வமான வாழ்த்துக்கள் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணுமே!!”