தேவையான பொருட்கள் :
இட்லி மாவு – 4 கரண்டி,
வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது),
உப்பு – 1 சிட்டிகை,
மிளகாய்தூள் – 1 ஸ்பூன்,
கருவேப்பிலை கொஞ்சம்,
பொரிக்க கொஞ்சம் எண்ணை
செய்முறை :
இட்லி மாவுடன் வெங்காயம், உப்பு, மிளகாய்தூள் மற்றும் கருவேப்பிலை சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணை ஊற்றி அடுப்பில் வைத்து, காய்ந்தவுடன் மாவை உருட்டிப் போடவும். பொரிந்தவுடன் எடுத்தால் இட்லி மாவு போண்டா ரெடி. மாலை டிபனுக்கு ஏற்றது.