நானும் மாத்திரையை எடுத்து வைத்து விட்டு அவள் அறைக்கு சென்று கீழே படுக்கை விரித்து படுத்துக் கொண்டேன். "ஏன் அத்தை, இன்று ஒன்றும் பிரச்சினை இல்லை. நீங்கள் பயப்படாமல் உங்கள் அறையிலேயே படுத்துக் கொள்ளுங்கள்" என்றாள்.
"இல்லையம்மா, நான் இங்கேயே படுத்துக் கொள்கிறேன்" என்று சொல்லி படுத்து தூங்கி விட்டேன். இரவு மூன்று மணி இருக்கும். "அத்தை, அத்தை, எழுந்திருங்கள். என் வயிற்றில் ஏதோ செய்கிறது. வலிக்கிறது" என்று என்னை உலுக்கி எழுப்பினாள்.
எழுந்து பார்த்தால் அவள் பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டு இருந்தாள். எப்படி இது சாத்தியம் என்று யோசிக்கக் கூட நேரம் இல்லை. உடனே தம்பிக்கு போன் போட்டு சீக்கிரம் வரச்சொன்னேன். ஆஸ்பத்திரிக்கும் டாக்டருக்கும் போன் பண்ணி மீனாவை அழைத்து வரும் தகவலைச் சொன்னேன்.
நல்ல காலம் தம்பி கூடுவாஞ்சேரியில் இருந்ததால் 20 நிமிடத்தில் காரில் வந்து விட்டான். மருமகளைக் கொண்டு போய்த் தாம்பரம் லலிதா நர்ஸிங்ஹோமில் சேர்த்தோம். அங்கே டாக்டர்கள் தயாராக இருந்தார்கள். மீனாவை செக் பண்ணிப் பார்த்து விட்டு உடனே ஆபரேஷன் அறைக்கு அழைத்துச் சென்று விட்டார்கள்.
முப்பது நிமிடங்களில் வெளியே வந்த டாக்டர் லலிதா "நல்ல வேளை, உடனே கொண்டு வந்தீர்கள். குழந்தையின் கழுத்து நஞ்சுக் கொடியில் சிக்கியிருந்தது. நீங்கள் தாமதம் பண்ணியிருந்தால் குழந்தையை காப்பாற்றியிருக்க முடியாது. இப்போது தாயும் குழந்தையும் நலமாக இருக்கிறார்கள். ரூமுக்கு வந்த பிறகு போய்ப் பாருங்கள்" என்றார்.
என் நெஞ்சு நன்றியினால் நிரம்பி வழிந்தது. நான் தூக்க மாத்திரையை போட்டு என் அறையில் படுத்து இருந்தால் நினைக்கவே பயமாக இருந்தது. "ஆம், வள்ளியம்மை! எங்களை விட குழந்தை நல்ல படியாக பிறக்க வேண்டும் என்பதில் உனக்குத்தான் எத்தனை அக்கறை, நன்றி தாயே" மனதிற்குள் சொல்லிக் கொண்டேன்.
மறுநாள் விடியற்காலையில் வெல்லப் பொங்கல், வடை, பாயசம் அனைத்தும் செய்து தட்டில் வைத்து புளியமரத்தின் அடியில் வைத்து வள்ளியம்மைக்கு படைத்தேன். மரத்தைச் சுற்றி வந்து வணங்கினேன்.
அதற்கு அடுத்த நாள் நான்கு ஆட்கள் தகுந்த ஆயுதங்களுடன் வந்து புளியமரத்தைத் துண்டு துண்டாக வெட்டி வண்டியில் எடுத்துப்போய் விட்டார்கள்.
இப்போதெல்லாம் குழந்தையை எடுத்துக் கொண்டு தோட்டத்தில் உலவும் போது, அந்தப் புளியமரம் இருந்த வெற்றிடத்தைப் பார்க்கும்போது, ஏனோ நெஞ்சு அடைப்பது போல இருக்கிறது. அது துக்கமா இல்லை ஆனந்தமா என்று தான் எனக்குத் தெரியவில்லை!
“
ரொம்ப நல்ல கதை..வாழ்த்துக்கள்..
நல்ல கதை. ஆவிகள் என்றாலே தீயவை என்ற கருத்துக்கு மத்தியில் நல்ல ஆவிகளும் உள்ளன என்பதை சித்தரிக்கிறது இக்கதை. வாழ்த்துக்கள் ராஜேஸ்வரன்!
இப்போ எனக்கும் நெஞ்சு அடைக்குது… அருமை!
Vஎர்ய் நிcஎ ச்டொர்ய்
மிக நல்ல கதையை படித்த ஒரு திருப்தி
மிக நல்ல கதையை படித்த ஒரு திருப்தி