தொடங்குகையில் மெல்லியதாய் தூய்மையுடன் காணும்
தொலைதூரம் செல்லுகின்ற ஆற்றலுள்ளே நிற்கும்
வடம்பிடித்தாற் போல்முதலில் வாகாகச் செல்லும்
வருபவற்றைத் தன் துணையாய் அரவணைத்துக் கொள்ளும்
இடம்மாறிப் பேறிறைச்ச லோடுகுதி போடும்
இடம்வலமாய் எதிர்த்திசையில் ஏற்றமுறச் செல்லும்
அடங்குகையில் கடலுக்குள் அமிழ்ந்திடும் பேராறு
அதுபோன்றே நம்வாழ்க்கை அதையறிந்து கொள்வாய்!
வாசக நண்பர்களே, வரி 5- பேரிரைச்சல் எனத் திருத்தி வாசிக்கவும். நன்றி.
பாலு சார்!
அனைத்து வரிகளுமே அருமை, அற்புதம்..
வற்றா நதியைப் போல் தங்களின் கற்பனைகளும், கவிதைகளும் வாழ்ந்துக்கொண்டே இருக்கட்டும்…..
பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி ராஜி!