இந்தியாவில் ஒரு மனிதனுடைய சராசரி ஆயுட்காலம் ஆணுக்கு 67, பெண்ணுக்கு 70.
மனிதனுடைய ஆயுள், பரம்பரையைப் பொறுத்தும் அமைகிறது. மரபு அணுக்களும் இதில் சம்பந்தப்பட்டிருக்கின்றன. 10 – 15 வருடங்கள் கூடுதலாக வாழ, நவீன மருத்துவ ஆய்வுகள் பின்வரும் வழிகளைப் பரிந்துரைக்கின்றன:
1.ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு முழுமையாக மனநிறைவோடு சாப்பிட வேண்டும்.
2.தினமும் ஒரே மாதிரியான உணவு சாப்பிட வேண்டாம். நாளுக்கு நாள் வித்தியாசமான உணவு உட்கொள்வது நல்லது. தினமும் பழமும் காய்கறிகளும் அதிகமாக சாப்பிடுவது மிகச் சிறந்தது.
3.வாரத்துக்கு இரண்டு முறையாவது மீன் உள்ளிட்ட கடல் உணவுகள் சாப்பிடுவது நல்லது. சைவ உணவுக்காரர்கள் இதைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை.
4.மது அருந்தக் கூடாது. புகையிலை போன்ற லாகிரிப் பொருட்களை அறவே நீக்க வேண்டும்.
5.தினமும் ஒரு வேளையாவது பால் அருந்துவது நல்லது.
6.மனித உடல் எப்பொழுதும் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.
7.வயதுக்கேற்ற உடற்பயிற்சி செய்வது நல்லது,
8.தாகம் எடுக்கிற அளவு கடுமையான உடற்பயிற்சி செய்தல் ஆகாது.
9.உணவில் அதிகமான மாமிசக் கொழுப்புச் சத்து சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
10.வாரம் இரண்டு அல்லது மூன்று முறைகளுக்கு மேல் அசைவ உணவு சாப்பிடக் கூடாது.
11.உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
12.கோபம், தாபம் முதலான உணர்ச்சிகளுக்கு அதிக இடம் கொடுக்கக் கூடாது.
னல்ல செதி . நனு .
மிகவும் பயனுல்ல விசயம்
எல்லாம் ஓகே ஆனா மது புகை இல்லாம இருக்க முடியாதுடா சாமி!!!!
சரி உடல் எடைய குரைக்க என்ன வலி
it is very use full..thanks.. raji
எளிமையான தேவையான வழிகாட்டல் இன்னும் எதிர்பார்க்கிறோம்