எது உனக்குப் பேரென்று
எது உனக்கு முகமென்று
எது உனக்கு ஊரென்று
எது உனக்கு நாடென்று
வெட்டருவா வேல்கம்பு
பட்டப்பகல் வீதிகளில்
வெட்டித்தினம் ரத்தஆறு
பாய்ந்தோடி நிக்கையிலே
பக்திகண்ட வேதனையில்
பழகிப்போன மௌனத்தில்
ஆராரோ ஆரிரரோ
ஆண்டவனே கண்ணுறங்கு
***
தடவைக்கொரு வேடமிட்டு
தரையிறங்கி நீயும் வந்து
ஒண்ணுஞ் செய்ய முடியாம
ஓய்ந்து போய்விட்டாயோ
இன்று நீ எவரெவர்க்கோ
ஏதேதோ ஆகிவிட்டாய்
நேற்று நீயாரென்று
அறிந்தோரும் யாரிருக்கா
நாளை நீயாரென்று
அறியலாமோ ஆண்டவனே
அன்றைக்குக் கண் விழிப்பாய்
அதுவரைக்கும் கண்ணுறங்கு
***
‘பச்சை மிளகாய் இளவரசி’ மின்னூலிலிருந்து
To buy this EBook, Please click here“
பிரமாதம் பிரமாதம்.