தேவையானவை:
அவல் – 1 ½ கோப்பை,
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி,
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை,
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு,
கறிவேப்பிலை – சிறிதளவு,
பயத்தம் பருப்பு – ஒரு மேசைக்கரண்டி,
வறுத்துப் பொடிக்க:
காய்ந்த மிளகாய் – 4,
துவரம்பருப்பு – ஒரு தேக்கரண்டி,
கடலைப்பருப்பு – ஒரு தேக்கரண்டி,
உளுத்தம்பருப்பு – ஒரு தேக்கரண்டி,
தனியா – ஒரு தேக்கரண்டி,
தேங்காய்த் துருவல் – மூன்று தேக்கரண்டி,
தாளிக்க:
கடுகு – அரை தேக்கரண்டி,
உளுத்தம்பருப்பு – கால் தேக்கரண்டி,
கறிவேப்பிலை – சிறிதளவு,
எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி,
செய்முறை:
அவலைப் புளித் தண்ணீரில் (புளியை இரண்டு கோப்பைத் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள்) பிசறி ஒன்றரை மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளுங்கள்.
பயத்தம் பருப்பைக் குழையாமல் சரியான பதத்தில் வேகவைத்து, தண்ணீரை வடித்துக்கொள்ளுங்கள்.
வெறும் வாணலியில், வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு நன்கு சிவக்க வறுத்துப் பொடித்துக் கொள்ளுங்கள்.
பிறகு, ஊறிய அவலுடன் வறுத்துப் பொடித்த பொடி, மஞ்சள்தூள், உப்பு, பெருங்காயம், வேகவைத்த பருப்பு சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள்.
எண்ணெயைக் காயவைத்துக் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டிக் கிளறுங்கள். சுவையான அவல் உப்புமா ரெடி! தேங்காய் சட்னியுடன் பரிமாறுங்கள்!
சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்!