முகவரி பிழையுடன்
கடிதம் ஒன்று
இன்று என்னிடம் வந்தது.
அது ஒரு இரங்கல் செய்தி.
இறுதி நாளுக்கான அழைப்பு.
எப்படியேனும் உரியவரைச்
சந்தித்து சேர்க்கத் தவித்தேன்.
பெயர் பொருந்தியவர்களிடம்
விசாரித்ததில்
அப்படி ஒரு உறவினர் இல்லை
என்ற பதில்.
உங்களில் யாருக்கேனும்
இறந்தவரைத் தெரியுமா
என்று வினவியதில்
அதற்கும் இல்லை என்றே பதில்.
கேலிச் சிரிப்பு வேறு!
‘இருக்கிறவன் பாடே திண்டாட்டம்..
போனவனைப் பத்தி என்ன கவலை?!’
நூறு நபர்களை விசாரித்து
அலுத்துப் போனதில்
வந்த கடிதத்தைக்
கிழித்துப் போட்டேன்.
‘திருப்பி அனுப்பி இருக்கலாமே’
என்றார் நண்பர்.
செத்துப் போனவருக்கு
இனி ஏது முகவரி?
****
“
செத்தவனுக்கு முகவரி தெவை இல்லைதான் என்ராலும் சாகாத கவிதை உன்கல்
கவிதையின் முகவரியை சொல்லிவிட்டது பாராட்டுதல்கல் உனிகொட்டின் எழுத்து பிழைக்காக வருன்டுகின்ட்ரென்