அழகுக் கேள்விகள்

1. கண்களைச் சுற்றியுள்ள கருவளையத்தைப் போக்குவதெப்படி?
கருப்புத் தேநீரில்(டீ டிக்காஷன்)பஞ்சை நனைத்து மூடிய கண்களின் மேல் அரை மணி நேரம் வைக்கவும்(வடியும் அளவு நனைக்க வேண்டாம்). தொடர்ந்து தினமும் இரவு படுப்பதற்கு முன்பு இதைச் செய்து வந்தால் கருவளையம் மறையும்.
இரவு 10 மணியளவில் படுத்துத் தூங்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். 7 மணி நேரத் தூக்கம் அவசியம்.

*****                                   

2. மூக்கின் மேல் காணப்படும் கரும்புள்ளிகளையும் வெள்ளைப் புள்ளிகளையும் நீக்குவதெப்படி? தடுப்பதெப்படி?
கரும்புள்ளிகள் மூக்கிலுள்ள துவாரங்களில் சேரும் தூசி, மாசினால் ஏற்படுகின்றன. எங்கு வெளியில் சென்று வந்தாலும் முகத்தை நன்றாகக் கழுவுங்கள். வாரம் ஒரு முறை வெறும் தண்ணீரில் ஆவி பிடியுங்கள். ஆவி பிடித்ததும் அந்த வேர்வை நீங்க, பூத்துவாலையால் முகத்தை அழுந்தத் துடையுங்கள். ஆவி பிடிப்பதன் மூலம் முகத்திலுள்ள துவாரங்கள் திறந்து அழுக்கு நீங்கும். இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதால் அழுக்கு சேராது. கரும்புள்ளிகளும், வெள்ளைப் புள்ளிகளும் நீங்கும்.
தலையில் பொடுகு இருந்தாலும் இவை தோன்றலாம்.

*****

3. உதடு மிகவும் உலர்ந்து வறண்டு காணப்படுகிறது. எப்படி சரி செய்வது?
அடிக்கடி தண்ணீர் குடியுங்கள். உதடுக்கென்று உள்ள கிளிசரின் (Lip Glycerin) உபயோகியுங்கள்.

*****

About The Author