தானியங்கிகளில் (automobiles) பயன்படும் வினையூக்க மாற்றி (Catalytic converter)
பெட்ரோலை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் தானியங்கிகளின் (automobiles) வெளியேற்றுக் குழாய்களில் (exhaust pipes) பொருத்தப்படும் சாதனமே வினையூக்க மாற்றி எனப்படும் கேட்டலிடிக் கன்வெர்ட்டர் ஆகும்; தானியங்கிகளில் இருந்து வெளியேறி சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வாயுக்களின் உமிழ்வைக் (emission) குறைத்திட இது உதவுகிறது. ஈயம் இல்லாத பெட்ரோலைப் (unleaded petrol) பயன்படுத்தும் தானியங்கிகள் வெளியேற்றும் புகையில் நைட்ரஜன் ஆக்சைடுகள், கார்பன் மோனாக்சைடு மற்றும் பென்சீன் போன்ற வாயுக்கள் அடங்கியுள்ளன; இவற்றை உள்ளிழுத்தால் (inhale) உடல்நலத்திற்குத் தீங்கு விளையும். இந்த வாயுக்களை ஆபத்தில்லாத கார்பன் டை ஆக்சைடு, நீராவி மற்றும் நைட்ரஜன் போன்றவையாக மாற்றுவதற்கு வினையூக்க மாற்றி உதவுகிறது. பிளாட்டினம், வெனாடியம் அல்லது ரோடியம் (Rhodium) போன்ற வினையூக்கிகள் பூசப் பெற்ற களிமண் (ceramic) அல்லது உலோகத்தால் ஆன சட்டங்கள் (grids) கொண்டு வினையூக்க மாற்றி செய்யப்படுகிறது. வெளியேறும் வாயுக்கள் இதனைக் கடந்து செல்லும்போது, வினையூக்கியானது வேதியியல் வினைகளை (chemical reactions) மேற்கொண்டு தீங்கான வாயுக்களை தீங்கற்றவையாக மாற்றுகிறது. ஆனால் ஈயம் கலந்த பெட்ரோலை (leaded petrol) பயன்படுத்தும் தானியங்கிகளில் வினையூக்க மாற்றியைப் பயன்படுத்த இயலாது; ஏனெனில் இதிலுள்ள ஈயம் வினையூக்கியைச் செயல்பட விடாமல் தடுத்து சாதனத்தைப் பயனற்றதாக்கி விடுகிறது.
கொலஸ்ட்ரால் (Cholestrol)
கொலஸ்ட்ரால் என்பது சிக்கல் நிறைந்த ஒரு கொழுப்புப் பொருளாகும்; உயிரணுக்களை மூடியிருக்கும் சவ்வுகள் (membranes) உருவாதல் அல்லது ஹார்மோன்களின் ஒருங்கிணைப்பு போன்ற உடலின் இயல்பான செயல்பாடுகளுக்கு இது முக்கியமானதாகும். இருப்பினும் இந்த கொலஸ்ட்ரால் உடலில் மிகுதியானால் தீங்கும் நேரிடும். இரத்தம் கொண்டு செல்லும் தமனிக் குழாய்கள் (arteries) குறுகிப் போவதற்கு இது முக்கிய காரணமாக இருப்பதால், மாரடைப்பு (heart attack) ஏற்படுவதற்கும் இதுவே காரணமாகும். அறை வெப்ப நிலையில் (room temperature) கொலஸ்ட்ரால் திடப் பொருளாக இருப்பதுடன் தண்ணீரில் இது கரைவதுமில்லை. உடலிலுள்ள அனைத்துத் திசுக்களிலும் பல்வேறு அளவுகளில் கொலஸ்ட்ரால் அமைந்து உள்ளது. சாதாரண மனிதர் ஒருவரின் உடலில் சுமார் 60 கிராம் கொலஸ்ட்ரால் உள்ளது; இதில் ஏறக்குறைய ஒரு கிராம் கொலஸ்ட்ரால் மட்டுமே நாள்தோறும் பயன்படுத்தப் படுகிறது. இழந்த கொலஸ்ட்ரால், உண்ணும் உணவைச் செரித்து, குறிப்பாக கொழுப்பு நிறைந்த உணவான உயர் அடர்த்தி லிபோபுரோட்டீன்களிலிருந்து (High Density Lipoproteins – HDLs), ஈடு செய்யப்படுகிறது. இரத்தத்தில் அதிக அளவு கொலஸ்ட்ரால் சேர்வது உடல்நலனுக்குத் தீங்கு பயக்கக்கூடியதாகும். HDL மிகுதியுள்ள விலங்குகளின் இறைச்சிக் கொழுப்புகள், தேங்காய் எண்ணெய், நெய் போன்றவற்றை மிகுதியாக உட்கொள்வதால் கொலஸ்ட்ராலும் மிகுதியாக உடலில் சேரும். இரத்த நாளங்களின் சுவர்ப் பகுதியில் இது படிந்து, குழாயின் அளவு குறுகுவதால் இரத்த ஓட்டத்தில் அழுத்தம் மிகுதியாகிறது. இந்நிலைமை “தமனித் தடிப்பு இறுக்கம் (atherosclerosis)” எனப்படும். இதன் காரணமாக இரத்த அழுத்தம் மிகுதியாகி மாரடைப்பு மற்றும் மூளை வலிப்புத் தாக்கம் எனப்படும் வாதநோய் (stroke) ஆகியன ஏற்படக்கூடும்.
“
இட் இச் ரெஅல்ல்ய் வெர்ய் உசெfஉல் அன்ட் இன்டெரெச்டிங். தன்க் யொஉ.