உன் பிடிவாதம்
என்
பிடிப்பின்மேல்
வந்திருந்தால்
நான்
அதிர்ஷ்டசாலி
**
உன் பிடிவாதம்
என்னைப்
பிரியாமையில் வந்திருந்தால்
வாழ்க்கை எனக்கு
புரியாமலே-
போயிருக்கும்
**
உன் பிடிவாதம்
என்னைப்
புரிந்துகொள்ளப்
புறப்பட்டால்
நான்
உனக்காக
மரித்திருப்பேன்
**
உன் பிடிவாதம்
என்
உணர்வுகளை
மதித்திருந்தால்
உன்னைமட்டுமே
நான்
உணர்ந்திருப்பேன்
**
உன் பிடிவாதம்
என்
கலாசாரத்தைப்
பூண்டிருந்தால்
உன்
காலடிசெருப்பாய்
காலமெல்லாம்
வாழ்வேன்
**
எனக்கும் பயன்படாத
எதற்கும் பயன்படாத
உன் பிடிவாதம்
உனக்கேனும் பயன்படுமா என
நான்
இல்லாத போதேனும்
அறி!
அறிவாயா???
அதையும் அறிந்துகொள்ள மறுத்துப் பிடிவாதம் பிடித்தால் என்னதான் செய்வது? தூண் பிடித்து வரமறுக்கும் குழந்தையெனில் தூக்கிப் போகலாம். வீண்பிடிவாதம் பிடிப்பவரை? விலக்கிப் போவதே நமக்கு நல்லது.
நெஞ்சைத் தொட்ட நல்ல கவிதை, வாழ்த்துக்கள்.