தேவையான பொருட்கள்:
அரிசி ரவை – 250 கிராம்
கேரட் – 1
பீன்ஸ் – 10
பச்சைப் பட்டாணி – ½ கோப்பை
தக்காளி – 1
பெரிய வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 4
புதினா – சிறிதளவு
மஞ்சள் பொடி – ¼ தேக்கரண்டி
இஞ்சி-பூண்டு விழுது – சிறிதளவு
பட்டை, லவங்கம் – 2
சோம்பு, ஏலப்பொடி – 1 தேக்கரண்டி
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து, சிறிதளவு எண்ணெய் விட்டு அரிசி ரவையை வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், காய்கறிகள் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். பச்சைப் பட்டாணியை வேக வைத்துத் தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
மீண்டும் வாணலியை வைத்து, தேவையான அளவு எண்ணெய் விட்டு, பட்டை, லவங்கம் மற்றும் மசாலா சாமான்களைப் போட்டுத் தாளித்து, பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், புதினா சேர்த்து வதக்குங்கள்.
பிறகு, நறுக்கி வைத்துள்ள காய்கறிகள், வேக வைத்த பச்சைப் பட்டாணி, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும். கூடவே, சிறிது மஞ்சள் பொடி தூவுங்கள்.
பின்பு, 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி, உப்புச் சேர்த்துக் கொதிக்க விட வேண்டும். தண்ணீர் கொதித்ததும் அரிசி ரவையைச் சேர்த்துக் கிளற வேண்டும். ரவை வெந்ததும் இறக்கினால், சுவையான ‘ அரிசி ரவை கிச்சடி ‘தயார்! கொத்துமல்லி தூவிப் பரிமாற வேண்டியதுதான்.
சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!