என் குரலில் துக்கம் மறந்து
என் பார்வையில் தூக்கம் தொலைத்து
என் கண்களில் அடைக்கலம் தேடும்
காதலியொருத்தி காத்துக்கிடக்க
அடகுவைத்த நகைகளையும்
அடக்கிவைத்த புதுவீட்டு ஆசையையும்
என் சம்பளத்தில் மீட்டெடுக்க
விழைவோர் வீட்டிலிருக்க
சிலருடன் பகிர்ந்த கனவுகளும்
சிலாகித்து என்னுள் விதைத்த கனவுகளும்
நீண்டுயர்ந்து பரவிக் கிடக்க
சீரணக் கோளாறாய் இருக்குமென
சிகிச்சை பெற சென்றவிடத்தில்
அரவம் இல்லா புற்று ஒன்று
அரவமில்லாமல் வயிற்றில் அடர்கிறதென்றனர்
ஆண்டு ஒன்று ஆயுள் அதிகமாம்
எனக்கும் என் உணர்வுக்கும்.
கனவுகளை எண்ணிய நான்
இப்பொழுதோ
நாட்களையே எண்ணுகிறேன்.
படம் பிடித்துத் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது படம் எடுக்காத புற்றரவை. பாதிக்கப் பாட்டவரின் மன நிலை அழகான கவிதையாகியுள்ளது. பாராட்டுகள்!
-அரிமா இளங்கண்ணன்
thats a good outcome
படித்து முடிக்கும் போது மனதிற்குள் ஏதோ ஒரு அழுத்தம்!! வசூல் ராஜா படத்தின் ஜாகீர் நினைவு வருகிறது…
ஸுபெர், இட் மகெச் மெ டொ ரெஅட் அகைன் அன்ட் அகைன் அன்ட் cரெஅட் அ க்ரெஅட் இம்பcட் ஒன் மெ..