அம்மா

மருத்துவமனையின் பல உபகரணங்கள் சுற்றியிருக்க
விழிகள் மூடியபடி படுக்கையில் என் தாய்.

‘கடைசி காலத்துல என்னைய கஷ்டபடுத்தாதடா…
பொட்டுனு ஒரு ஊசிய போட்டு கொன்னுபுடுடா,
உனக்குப் புண்ணியமாப் போவும்!’
வாரம் பத்து முறையாவது
வாய் வலிக்க ஒப்பிப்பாள்.

பக்கவாதத்தின் பலனால்
இடப்புறம் முழுதும் செயலற்று,
சிறுநீர் கழிக்கும் உணர்வுகூட இன்றி,
இரத்த அழுத்தம், சர்க்கரை நோயின்
அரவணைப்பில் கிடக்கும் போதும்,
இதையேச் சொன்னாள் திரும்பத் திரும்ப
விழிகள் திறக்கும் போதெலாம்!

அறையிலிருந்து வெளிவந்து
விறுவிறுவென வளாகத்தின் வாசல் வந்தேன்.
‘வணக்கம் டாக்டர்’ என்று வழிநெடுக கேட்ட குரல்களுக்கு
பதில் வணக்கம் கூட சொல்லத் தோன்றாமல்.
வெளி சுவற்றின் மீது என் பார்வை நிலைத்தது –

‘மதில் மேல் ஒரு பூனை!’

About The Author

11 Comments

  1. A.M.BADRI NARAYANAN.

    ஒரு பக்கம் தாய் பாசம். மறு பக்கமோ மருத்துவரின் கடமை. என்ன செய்வது?, மனத்தின் நிலை மதில் மேல் பூனை தான்.

    -தவப்புதல்வன்.

  2. sugantha subramanian

    அம்மா பட்ட வருத்தஙல் என் மனதை விட்டு அகலவில்லை. வருத்தமாக இருக்கிரது

  3. Rajasekaran

    மிகவும் அருமை நன்பா. வாழ்துக்கல்

Comments are closed.