சுவை மருத்துவம் – உப்பு சிகிச்சை
உப்புச் சுவை நாக்கில் பட்டால் நாக்கில் உள்ள சுவை மொட்டுக்கள் அதை நீர்ப் பிராணனாக மாற்றி உடல் முழுவதும் அனுப்பும். நீர்ப் பிராணன் மூலமாக வேலை செய்யும் உறுப்புகள் சிறுநீரகம், மூத்திரப்பை, காதுகள் ஆகியவை. இதற்கான உணர்ச்சி பயம்.
‘உப்பு சாப்பிட்டவன் தண்ணீர் குடிப்பான்’ என்று பழமொழி உள்ளது. உப்பு சாப்பிட்டால் ஏன் தண்ணீர் குடிக்க வேண்டும்? உப்பு நீர்ப் பிராணனாக மாறி உடம்பில் பரவும்பொழுது நீர்ப் பிராணன் மூலமாக வேலை செய்யும் சிறுநீரகம் அதிகமாக வேலை செய்ய ஆரம்பிக்கிறது. சிறுநீரகத்தின் வேலை உடலில் உள்ள தண்ணீர் அனைத்தையும் எடுத்து அதில் உள்ள நல்ல பொருட்களை இரத்தத்தில் கலந்து, கெட்ட பொருட்களைச் சிறுநீராக வெளியேற்றுவது. எனவே, சிறுநீரகம் அதிகமாக வேலை செய்யும்போது உடலுக்கு நீர்த் தேவை அதிகரிக்கிறது.
காதுக்கும் சிறுநீரகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. காதும் சிறுநீரகமும் வடிவத்தில் ஒரே மாதிரி இருக்கும்.
அதே போல், பயத்திற்கும் சிறுநீரகத்திற்கும் தொடர்பு உண்டு. ‘பயத்தில் சிறுநீர் கழித்து விட்டான்’ என்று நாம் வழக்கமாகக் கூறுவோம். பயம் வந்தால் ஏன் சிறுநீர் வெளியாகிறது? பயம் என்ற உணர்ச்சி மனதில் தோன்றினால் உடலில் உள்ள நீர்ப் பிராணனை அது சாப்பிட்டு விடும். உடலில் நீர் சக்தி இல்லையென்றால், சிறுநீர்ப்பை சிறுநீரைப் பிடித்து வைப்பதற்குத் தேவையான நீர் சக்தி கூட இல்லாமல் சிறுநீரை வெளியேற்றி விடுகிறது. எனவே, மனதில் பயம் வரும்பொழுது காது, சிறுநீரகம், சிறுநீர்ப்பை ஆகியவை பலவீனம் அடைந்து நோய் உண்டாக வாய்ப்பு உள்ளது. சிறுநீரகத்தில் நோய் வந்தால் மனதில் பயம் வரும். மனதில் பயம் வந்தால் சிறுநீரகத்தில் நோய் வரும்.
புற்றுநோய், எய்ட்ஸ் போன்ற உயிர்க்கொல்லி நோய்களால் பாதிக்கப்பட்டவர்களில் அந்த நோயால் உயிரிழந்தவர்களை விட பயத்தால் உயிரிழப்பவர்களே அதிகம். இந்த உயிர்க்கொல்லி நோய்களுக்கு மருந்து இல்லையென்று மருத்துவர்கள் நோயாளியைப் பயமுறுத்துகிறார்கள். இந்தச் செய்தி நோயாளியின் மனதில் ஆழமாகப் பதிந்து மனதில் ஒரு பயத்தை ஏற்படுத்துகிறது.
கரப்பான்பூச்சியைப் பார்த்தாலே பயப்படும் நபர்கள் உள்ள உலகத்தில், "ஒரு நோய் வந்து விட்டது; அதைக் குணப்படுத்த முடியாது; நீங்கள் இறந்துதான் போவீர்கள்" என்று ஒரு மருத்துவர் கூறினால் நோயாளிக்குப் பயம்தான் வரும். இப்படி நோயாளி பயந்தால் அந்தப் பயம் நீர் சக்தியை மொத்தமாகத் தீர்த்து விடும். உடலில் நீர் சக்தி எப்பொழுது இல்லையோ சிறுநீரகம் பாதிக்கப்படும். இந்த பயம்தான் சிறுநீரகத்தில் உள்ள நோயைப் பெரிதுபடுத்தி, உயிரைக் குடிக்கிறது.
புற்றுநோய், எய்ட்ஸ் போன்ற உயிர்க்கொல்லி நோய்களால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சிறுநீரகம் செயலிழந்து உயிரிழப்பது இதனால்தான். எனவே, எந்த நோயாக இருந்தாலும், தயவு செய்து முதலில் தைரியமாக இருங்கள்! பயப்பட்டால் நோய் பெரிதாகும். தைரியமாக இருந்தால் நோய் குணமாகும்.
உப்பு சாப்பிட்டே ரத்த அழுத்தத்தைக் குணப்படுத்தலாம்
இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் உணவில் உப்பைச் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்று கூறுவார்கள். பலர் உணவில் கொஞ்சம் கூட உப்பைச் சேர்த்துக் கொள்ளாமல், உப்புச் சப்பே இல்லாத உணவைச் சிரமப்பட்டுச் சாப்பிட்டு வருகிறீர்கள்.
பல ஆண்டுகளாக இப்படி உப்பு இல்லாமல் சாப்பிடுகிறீர்களே, உங்கள் நோய் குணமாகி விட்டதா? குணமாகவில்லை என்றால் தேவை இல்லாமல் ஏன் அதைக் கடைப்பிடிக்க வேண்டும்? சரி, அப்படி எத்தனை நாள் உப்பில்லாமல் சாப்பிட்டால் இரத்த அழுத்தம் குணமாகும் என்று யாராவது கூற முடியுமா?
உணவில் உப்பு சேர்த்தால் இரத்த அழுத்தம் ஏன் அதிகமாகிறது என்று பார்ப்போம்.
உப்பு நாக்கில் பட்டவுடன் அது நீர்ப் பிராணனாக மாறிச் சிறுநீரகத்தை வேலை செய்ய வைக்கும். கெட்டியாக, கழிவுப் பொருட்களுடன் சாக்கடை போல் இருக்கும் இரத்தத்தைச் சிறுநீரகம் சுத்தம் செய்து அந்தக் கழிவுப் பொருட்களைச் சிறுநீராக வெளியேற்றும். அப்பொழுது இரத்தம் நீர்த்துப் போகும். எனவே, இதயம் இரத்தத்தைச் சற்று வேகமாகப் பம்ப் செய்யும். எனவே, உப்பு சாப்பிட்டால்தான் இரத்தம் சுத்தமாகும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!
இப்படி இரத்தம் சுத்தம் அடையும்பொழுது, நீர்த்துப் போகும்பொழுது இரத்தத்தில் BP அளவு அதிகரிப்பது நோய் அல்ல; உடல் குணமாகிறது என்பதன் அடையாளம்.
இப்படி யாரோ சொல்கிறார்கள் என்று உப்பு சாப்பிடாமல் இருக்கிறீர்களே, உங்கள் இரத்தத்தைச் சுத்தம் செய்யாமல் வைத்துக் கொண்டிருக்கிறீர்களே, யார் உங்கள் இரத்தத்தைச் சுத்தம் செய்வது?
உணவில் உங்கள் நாக்கு எவ்வளவு உப்பு கேட்கிறதோ அந்த உப்பைச் சரியான அளவு பயன்படுத்தி வந்தால் நீங்கள் மயங்க வேண்டிய அவசியம் இல்லை! மருத்துவமனை சென்று சிகிச்சை பெறவும் அவசியம் இல்லை. உப்பு இல்லாப் பண்டம் குப்பையிலே என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். நீங்கள் என்ன குப்பைத்தொட்டியா? உப்பு இல்லாத உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? எனவே, உப்பு சாப்பிடக்கூடாது என்பது ஒரு தவறான கருத்து!
எனவே, இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் தயவு செய்து உங்கள் நாக்கு எவ்வளவு உப்பைக் கேட்கிறதோ அதைச் சரியான முறையில் பயன்படுத்துங்கள்! கண்டிப்பாக உங்களுக்கு BP, பயம், சிறுநீரக சம்பந்தப்பட்ட நோய்கள் என எல்லா நோய்களும் கண்டிப்பாகக் குணமாகும்!
உப்புக்கும், நீர்ப் பிராணனுக்கும், சிறுநீரகம், சிறுநீர்ப்பை, காது, பயம் ஆகியவற்றுக்கும் சம்பந்தம் உள்ளது என்ற விஷயம் தெரிந்த ஒரு மருத்துவர் மட்டுமே இந்த உறுப்புகள் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்த முடியும். இது தெரியாத மருத்துவரிடம் செல்லும்போது அந்தக் குறிப்பிட்ட உறுப்பை மட்டும் ஆராய்ச்சி செய்து, அறுவை சிகிச்சை செய்து, மருந்து மாத்திரை கொடுப்பதால்தான் எந்த உறுப்பிலும் எந்த நோயும் குணமாகாமல் பல ஆண்டுகளாக அப்படியே நாம் வைத்துக் கொண்டிருக்கிறோம்.
கைதுறப்பு (Disclaimer): இப்பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பாக இயலாது. இவற்றைச் செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்!
–அடுத்த அமர்வில் சந்திப்போம்…
“