இரத்தத்தில் உள்ள பொருட்களின் அளவு குறைவது எப்படி?
இரத்தத்தில் ஒரு பொருள் கெட்டுப் போவது என்பது நோயின் முதல் படி. இதைக் கண்ட்ரோல் செய்வதால் நாம் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படுகிறோம். இரண்டாம் நிலை என்பது இரத்தத்தில் உள்ள ஒரு பொருளின் அளவு குறைவது அல்லது இல்லாமல் போவது.
சர்க்கரையின் தரம் குறைந்தால் அது நோயின் முதல் நிலை. இரத்தத்தில் சர்க்கரையே இல்லாமல் போனால் அது இரண்டாம் நிலை; மயக்கம் வந்து விடும்.
இரத்தத்தில் கால்சியத்தின் தரம் குறைந்தால் குண்டாவீர்கள். இது பரவாயில்லை; சிறிய நோய். ஆனால், இரத்தத்தில் கால்சியத்தின் அளவு குறைந்தாலோ, அல்லது இல்லாமல் போனாலோ அது இரண்டாம் நிலை நோய். அப்பொழுது எலும்புகளில் உள்ள கால்சியம் இரத்தத்தை நோக்கி வரும். இதனால், எலும்புகள் உடையும்; அழுகிப்போகும். இது மிகப்பெரிய நோய்.
எனவே, இரத்தத்தில் ஒரு பொருளின் தரம் குறையும்பொழுதே அதை இயற்கை வழியில் நாம் சரி செய்து விட்டால், இரத்தத்தில் ஒரு பொருளின் அளவு குறைவது அல்லது இல்லாமல் போவது என்கிற இரண்டாம் நிலைக்கு நாம் தள்ளப்பட மாட்டோம். இப்படி இயற்கையான முறையில் குணப்படுத்தத் தெரியாத மருத்துவர்கள், நோயைக் கண்ட்ரோல் செய்கிறேன் என்கிற பெயரில் நம்மை வாழ்க்கை முழுவதும் மருந்து மாத்திரைகளைச் சாப்பிட வைத்து வியாபாரம் செய்கிறார்கள். ஒரு நோயைக் கண்ட்ரோல் செய்வது என்பது வேறு; குணப்படுத்துவது என்பது வேறு. நோயைக் குணப்படுத்தத் தெரியாத மருத்துவர்கள்தான் அதைக் கண்ட்ரோல் செய்வார்கள். எந்த நோயையும் கண்ட்ரோல் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. குணப்படுத்துவது மிக மிக சுலபம்.
இப்படி, யார் யாரெல்லாம் இரத்தத்தில் ஒரு பொருள் கெட்டுப்போகும்பொழுது அதைக் கண்ட்ரோல் செய்கிறேன் என்ற பெயரில் பல நாட்களாக, பல வருடங்களாக மருந்து மாத்திரை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்களோ உங்கள் எல்லாருக்கும் நோய் பெரிதுபடுத்தப்படுகிறது.
சில காலத்துக்குப் பிறகு இரத்தத்தில் கால்சியம் இல்லை, அயர்ன் இல்லை, சோடியம் இல்லை என்று இரண்டாம் நிலை நோய்க்குத் தள்ளப்பட்டு, அப்பொழுது அந்த நோய்க்கும் நாம் மருந்து மாத்திரை சாப்பிட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
இந்தத் தொடரை முழுவதுமாகப் படிப்பதன் மூலம் இவற்றை எப்படிச் சரி செய்வது என்பதை நாம் கற்றுக்கொள்ளப் போகிறோம்.
கைதுறப்பு (Disclaimer): இப்பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பாக இயலாது. இவற்றைச் செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்!
–அடுத்த அமர்வில் சந்திப்போம்…
“