கொழுப்பு, கொழுப்பு கட்டி (HDL, LDL)
நாம் சாப்பிடுகிற எல்லா உணவுகளிலும் கொழுப்பு என்ற பொருள் இருக்கிறது.
பொதுவாகக் கொழுப்பு என்பது எண்ணெய்ப் பலகாரம் மற்றும் தேங்காயில்தான் இருக்கிறதென்று கூறுவார்கள். ஆனால், அவற்றில் மட்டுமல்ல. அனைத்துத் தானியங்களிலும் அனைத்து உணவுகளிலும் இருக்கிறது. கொழுப்பு சம்பந்தப்பட்ட பொருட்களை நன்றாக ஜீரணம் செய்து இரத்தத்தில் கலந்தால் அது நல்ல கொழுப்பு (Good Cholesterol). சரியாக ஜீரணம் ஆகாமல் அரைகுறையாக ஜீரணம் ஆகி இரத்தத்தில் கலந்தால் அதன் பெயர் கெட்ட கொழுப்பு (Bad Cholesterol).
இதைத்தான் மருத்துவர்கள் முறையே HDL (High Density Lipo Protein), LDL (Low Density Lipo Protein) என அழைக்கிறார்கள். சரியாக ஜீரணமான கொழுப்பு HDL, கெட்ட கொழுப்பு LDL.
சரியாக ஜீரணமாகாத கெட்ட கொழுப்புகள் (LDL) இரத்தத்தில் கலக்கும்பொழுது அவை ஆங்காங்கே தேங்கிக் கட்டி போல் மாறுகின்றன. இதைத்தான் கொழுப்புக் கட்டி என்று அழைக்கிறார்கள். இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகள் இரத்த நாளங்களின் சுவர்களில் அடைத்துக் கொண்டால் இரத்த நாளத்தின் அளவு குறையும்போது இரத்த அழுத்தம் (BP) அதிகமாக வாய்ப்புள்ளது. கெட்ட கொழுப்புகள் எந்தெந்த உறுப்புகளுக்குள் செல்கின்றனவோ அந்த உறுப்புகள் அனைத்திற்கும் நோய் வரும். இந்தக் கெட்ட கொழுப்பைக் கல்லீரல் எடுத்துப் பித்த நீராக (BILE) மாற்றிப் பித்தப்பையில் சேர்த்து வைக்கும். நாம் சாப்பிடுகிற சாப்பாடு ஜீரணம் ஆக வேண்டும் என்றால் பித்தப்பையிலிருந்து பித்த நீர் சுரக்க வேண்டும். பித்த நீர் என்பது ஒரு கொழுப்பு நீராகும். கெட்ட கொழுப்பால் உருவாக்கப்பட்ட பித்த நீரால் ஜீரண வேலையைச் சரிவரச் செய்ய முடியாது. கெட்ட கொழுப்பு இருதயத்தில் சென்று பல இடங்களில் அடைத்துக் கொண்டால் அதற்கு இருதய அடைப்பு என்று பெயர்.
எனவே, கொழுப்புக் கட்டிகள், இரத்த அழுத்தம் அதிகமாகுதல், ஜீரணக் குறைபாடு, உடலிலுள்ள அனைத்து உறுப்புகளுக்கும் நோய் வருவது, இருதயத்தில் அடைப்பு ஏற்படுவது ஆகிய அனைத்திற்கும் ஒரே ஒரு காரணம் நாம் சாப்பிடுகிற உணவில் உள்ள கொழுப்புப் பொருட்கள் ஒழுங்காக ஜீரணம் ஆகாமல் இரத்தத்தில் கலப்பதே!
கைதுறப்பு (Disclaimer): இப்பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பாக இயலாது. இவற்றைச் செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்!
–அடுத்த அமர்வில் சந்திப்போம்…
“