நுரையீரலில் வரும் நோய்களுக்குக் காரணம் என்ன?
நாம் சுவாசிக்கும் காற்றில் தூசு, குப்பை, செல்போன் அலைவரிசை, டி.வி அலைவரிசை, செயற்கைக்கோள் அலைவரிசை, வைரஸ், பாக்டீரியா எனக் காற்று சம்பந்தப்பட்ட எல்லாப் பொருட்களும் உள்ளன.
மூக்கின் வழியாக உள்ளே செல்லும் காற்று நுரையீரலுக்கு வரும்பொழுது நுரையீரல் காற்றிலுள்ள ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் போன்றவற்றை எடுத்து இரத்தத்தில் சேர்க்கிறது. இவை இரத்தம் மூலமாக உடலிலுள்ள அனைத்துச் செல்களுக்கும் செல்கின்றன. ஒவ்வொரு செல்லுக்குள்ளும் போகும் நல்ல காற்று, பயன்பாடு தீர்ந்ததும் கெட்ட காற்றாக மாறி வெளியே வருகிறது.
உதாரணமாக, ஆக்ஸிஜன் ஒரு செல்லுக்குள் சென்று பின் கார்பன்-டை-ஆக்ஸைடாக மாறி மீண்டும் இரத்தத்திற்கு வருகிறது. இந்தப் பயன்படுத்தப்பட்ட காற்று, இரத்தம் வழியாக மீண்டும் நுரையீரலுக்கு வந்ததும் நுரையீரல் அதை மூக்கு என்ற பாதை வழியாக வெளியே அனுப்புகிறது. ஆக, நுரையீரல் என்பது உடலிலுள்ள அனைத்துச் செல்களுக்கும் நல்ல காற்றை அனுப்பி, கெட்ட காற்றை வெளியேற்றும் கருவி.
தியானம் செய்யும் பொழுது நுரையீரல் குறைவாக வேலை செய்கிறது. ஓடும்பொழுது வேகமாக, அதிகமாக வேலை செய்கிறது. எத்தனை செல்களுக்கு காற்று என்ற உணவு தேவைப்படுகிறதோ அந்த அளவுக்கு நுரையீரல் வேலை செய்யும். நுரையீரலின் இயக்கம் உடலிலுள்ள அனைத்துச் செல்களாலும் கட்டுப்படுத்தப்படுகிறது. எனவே, நுரையீரல் சம்பந்தப்பட்ட ஆஸ்துமா, மூச்சு அடைத்தல், வீசிங், நெஞ்சுச் சளி, இருமல் போன்ற நோய்கள் வரும்பொழுது நாம் நுரையீரலில் சிகிச்சை அளிக்கக்கூடாது! இவற்றுள் எதுவும் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய் கிடையாது. உடலில் எத்தனை செல்களுக்குக் காற்று சம்பந்தப்பட்ட நோய் வருகிறதோ அப்பொழுது நுரையீரல் பாதிக்கப்படும். எனவே, உடலிலுள்ள அனைத்து உறுப்புகளுக்கும் காற்று சம்பந்தப்பட்ட குறையை நீக்கினால் நுரையீரலில் உள்ள நோய் குணமாகும்.
உதாரணமாக, ஒருவருக்குச் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு விட்டது என வைத்துக் கொள்ளுங்கள். சிறுநீரகத்திலுள்ள செல்கள் தம் நோயைக் குணப்படுத்திக் கொள்வதற்காகக் காற்று வேண்டும், காற்று வேண்டும் என்று நுரையீரலிடம் கேட்கும். நுரையீரல் சிறுநீரகத்தின் செல்களுக்குக் காற்று கொடுத்துக் கொடுத்து கெட்டுப் போக வாய்ப்பு உள்ளது. இப்படி, உடலில் எத்தனை இலட்சம் செல்களுக்கு நோய் ஏற்பட்டு அதற்குத் தீர்வாகக் காற்றை எதிர்பார்த்து நிற்கின்றனவோ அதற்கேற்ப நுரையீரல் அதிகமாக வேலை செய்கிறது; கெட்டுப் போகிறது. எனவே, நுரையீரல் சம்பந்தப்பட்ட எந்த நோய்க்கும் நுரையீரலில் சிகிச்சை கொடுக்கக் கூடாது! தலைமுடி முதல் கால் நகம் வரை உள்ள அனைத்து செல்களுக்கும் காற்று சம்பந்தப்பட்ட குறைகளைத் தீர்ப்பதன் மூலமாக மட்டுமே நுரையீரலில் வரும் நோய்களைக் குணப்படுத்த முடியும்!
இது புரியாத மருத்துவர்கள் ஆஸ்துமா, வீசிங் போன்ற நோய்களுக்காக நுரையீரலுக்கு மருந்து, மாத்திரை கொடுத்து நோய்களைப் பெரிதுபடுத்துகிறார்கள். ஆஸ்துமா, வீசிங் போன்ற நோய்களுக்கு மருந்து சாப்பிடுபவர்களுக்கு ஒரு கேள்வி. நீங்கள் சாப்பிடும் மருந்தின் அளவு போகப் போக அதிகமாகிறதா அல்லது குறைகிறதா? எப்பொழுது ஒரு மருந்தின் அளவு போகப் போக அதிகமாகிறதோ அந்த அளவுக்கு நோயைப் பெரிதுபடுத்துகிறீர்கள். அது தவறான வைத்தியம் என்று பொருள்.
நமது சிகிச்சையில் உடலிலுள்ள அனைத்து உறுப்புகளுக்கும் காற்று சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதன் மூலமாக நுரையீரலில் வரும் அனைத்து நோய்களையும் குணப்படுத்த முடியும்!
கைதுறப்பு (Disclaimer): இப்பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பாக இயலாது. இவற்றைச் செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்!
–அடுத்த அமர்வில் சந்திப்போம்.