18.
என்
அனைத்து வலியிலும்
அனைத்துப் போரிலும்
நீயே
ப்ரசன்னமாகி
காக்கிறாயென்னை.
என்னை
அதிபூர்ணனாக்கிடும்
அருமருந்து
உறைகிறது உன்னிடம்
நீ யென்
உயிர்ப்பு
நீ யென்
நிழல்
நீ யென்
நான்.
19.
எழுதப்பட்ட
எழுதப்படாத
எல்லாவிதிகளையும் மீறி
நாகமென நீள்கிறதென் நா
உன்
சௌந்தர்ய அமிழ்தத்தை
உறிஞ்சிப்பருக.
(‘சாட்சியாக…’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here
“