34.
எழுத நினைத்த
எல்லா வரிகளும்
வெட்கி மறைகின்றன
உனைப் பார்த்து.
எழுத யத்தனிக்கையில்
எல்லாச் சொற்களையும்
வெருண்டோடச் செய்து
நீயே நிறைகிறாய்
என் குறிப்பேட்டின்
எல்லாப் பக்கங்களிலும்
சொல்லேதுமற்ற
இன்கவிதையாய்.
35.
நானுனை மீட்ட
நீயெனை மீட்ட
நானுனை மீட்ட
நீயெனை மீட்ட
நம் தந்திகள்
தாளகதியின்
உச்சபட்ச ஸ்திதியில் தடுமாற
எல்லாயுகத்திலும்
இப்படியே இசை(ந்)த்திருப்போம் வா
வேறுவினை ஏதுமற்று.
(‘சாட்சியாக…’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here
“