29.
கவிதையோடு
வாழ்தல்…
கவிதையோடு
மட்டும் வாழ்தல்…
எனக்கேயான
கவிதையோடு
அல்லது
உன்னோடு…
30.
கவிதை என்பது
மாயங்களின்
புதிர்வீடு-
உன் விரல்நுனிகளின்
மாயத்தீ போல.
31.
காட்டு மூங்கிலில்
காற்று இசைக்கும்
தீராப் பேரிசையின்
அமுத வைப்பாய்
தொடர்ந்து என்னுள்
புகுந்தாடி
புளககிக்கச் செய்யும்
மூங்கிலாய் நீ!
உனை வாசிக்கும்
காற்றாய் நான்!
(‘சாட்சியாக…’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here
“