38.
இப்பவெல்லாம்
என் அதிகாலைக் கனாக்களின்
அத்தனை வெளிகளையும்
மொத்தமாய் ஆக்ரமித்துவிடுகிறாய்
என் கனா ஸ்கலிதம்
உன்னுள் பாய்கையில் கிட்டுமின்பம்
இன்னும் காணேன்
எதிலும்
39.
என்னதான் போட்டியிட்டும்
உன் பிசிறுமுடிகளின் தகதகப்பின் முன்
மட்டமாய் தோற்றுப்போகிறது
சாலையோரம் பூத்துக்குலுங்கும்
தீக்கொன்றை மரம்
40.
நீயென்னை
அம்போவென விட்டுப்போனாய்
நான்
பைத்தியமாகும்படிக்கு
ஆயினும்
அவ்வப்போது
கனாக்களில் வந்தென்னைப் புணர்ந்து
வாழ்வித்தபடியிருக்குதுன்
சூட்சுமம்.
(‘சாட்சியாக…’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here
“