அதீதாவுக்கு

16.

உன் மையம் ஓர்
பெருஞ்சுழல்

அதில் பட்டுப் பட்டுப்
பட்டழியுதென்
இன்னுயிர்
யுகாந்திரமாய்

நம் விழிப்புலம்
நமதிருப்பை ஒன்றாக்கி
கலக்கச்செய்கிறது
க்ஷணப்போதில்

நீயும் நானும்
ஒன்றாய்ப்புணரும்
நாகங்களாய்
நெளிகிறோம்
உன் வாழைப்பரப்பின்
வழுக்கலில் தெறித்து
உருள்கிறேனுன்
பாதாந்திரத்தில்

பின் –
முளைத்தெழும்
தளிர் ஜ்வாலையாய்
எழுகிறேன் மீண்டு(ம்)
உன் சகலத்தையும்
ருசித்துப் புசிக்க.

17.

உனைச் சுற்றி
சதா அலையுதென்
உயிர்ப் பிசாசம்
தீராப்பசியுடன்

ஏழுகடல்தாண்டி,
ஏழு மலை தாண்டி,
ஏழேழு பிறவியுற்று
இங்கு வந்தேன்-
உனையுண்ண!

(‘சாட்சியாக…’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here

About The Author